பாடு பிறந்து இன்பஞ்செய்யா தாகலானும், உடன்கூறிய உலகியல் வழக்கத்தினை ஒழித்தல் வேண்டு மாகலானும், அது பொருந்தாது. அல்லதூஉம் அங்ஙனங்கொண்ட இறையனார் களவியலுள்ளும், ‘‘வேந்துவினை யியற்கை பார்ப்பார்க்கு முரித்தே’’
(இறையனார்.37) ‘‘அரச ரல்லா வேனை யோர்க்கும் புரைவ தென்ப வோரிடத் தான’’
(இறையனார்.38) எனவும், ‘‘வேந்தற் குற்றுழிப் பொருட்பிணிப் பிரிவென் றாங்கவ் விரண்டு மிழிந்தோர்க் குரிய’’
(இறையனார்.39) எனவும் நான்கு வருணமுங் கூறி, நால்வகைத் தலைமக்களையும் உணர்த்தலின் இல்லதென்பது தொல்லாசிரியர் தமிழ்வழக்கன்றென மறுக்க. இக்கருத்தானே மேலும் ‘மக்க ணுதலிய வகனைந் திணையும்’ (தொல். பொ. அகத். 54) என்பர். (53) அகனைந்திணைக்கண்ணும் தலைவன் முதலியோர் இயற்பெயராற் கூறப்பெறார் எனல்
|