இதுமுன்
ஈரேழாமென்ற
துறை, இருவகைப்பட்டு இருபத்தெட்டாமென்கின்றது. (இ-ள்)
படை இயங்கு அரவம் - நிரைகோடற்கு எழுந்த படை பாடிப்புறத்துப் பொருந்தும் அரவமும், நிரைமீட்டற்கு எழுந்த படை விரைந்து செல்லும் அரவமும்; உ-ம்: ‘‘வெவ்வாண் மறவர் மிலைச்சிய வெட்சியாற் செவ்வானஞ் செல்வதுபோற் செல்கின்றா - ரெவ்வாயு மார்க்குங் கழலொலி யாங்கட் படாலியரோ போர்க்குந் துடியொடு புக்கு’’
(பெரும்பொருள் விளக்கம்.
புறத்திரட்டு. 1236. நிரைகோடல்.5) ‘‘அடியதி ரார்ப்பின ராபெயர்த்தற் கன்னாய் கடிய மறவர் கதழ்ந்தார் - மடிநிரை மீளாது மீளார் விறல்வெய்யோர் யாதாங்கொல் வாளார் துடியர் வளம்’’
(புறத்திரட்டு.1245) இவை கண்டோர் கூற்று. பாக்கத்து விரிச்சி - நிரைகோடற்கு எழுந்தோர்
|