னையாற்றிய பகுதியிற் சென்ற உள்ளம் மீட்டலுந் தலைவற்கு உரியவென்று கொள்க. “சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு”
(குறள்.422) எனவரும். பெருமை
நிமித்தமாக உரன் பிறக்கும், அவ்வுரனான் மெய்யுறு புணர்ச்சி இலனாதலும் உரியனென இதுவும் ஒரு விதி கூறிற்று. தலைவிக்கு மெய்யுறு புணர்ச்சி நடக்கும் வேட்கை நிகழாமைக்கும் காரணம் மேற் கூறுப. இனி இயற்கைப்புணர்ச்சி இடையீடு பட்டுழி இடந்தலைப்பாட்டின்கண் வேட்கை தணியாது நின்று கூடுபவென்றும், ஆண்டும் இடையீடு பட்டுழிப்பாங்கனாற் கூடுபவென்றும், உரைப்போரும் உளர்; அவர் அறியாராயினார்; என்னை? அவ்விரண்டிடத்தும் இயற்கைப் புணர்ச்சிக்கு உரிய
மெய்ப்பாடுகள் நிகழ்ந்தே கூட வேண்டுதலின் அவற்றையும் இயற்கைப் புணர்ச்சியெனப் பெயர் கூறலன்றிக் காமப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் பாங்கொடு தழாஅலும் என ஆசிரியர் வேறு வேறு பெயர்
கூறாரென்றுணர்க.
(7) தலைவிகண்ணும் அவ்வுள்ளப்புணர்ச்சியளவில் நிகழ்தற்குக்
காரணங் கூறல் |