றேயும்
புணர்ச்சிக்கு உரியளாமென்றற்குப்
பன்னிரண்டு மெய்ப்பாடுங் கூறினார். இவற்றானே, புணர்ச்சி பின்னர்ப் பெறுதுமெனத் தலைவனைப்போல ஆற்றுவாளாயிற்று. இருவர் கண்ணுற்றுக் காதல் கூர்ந்த வழியெல்லாங் கந்தருவமென்பது வேத முடிபாதலின் இவ்வுள்ளப் புணர்ச்சியுங் கந்தருவமாம் ஆதலான் அதற்கு ஏதுவாகிய ‘பெருமையும் உரனும்’ ‘அச்சமும் நாணும்’ போல்வன கூறினார். இச்சூத்திரம் இரண்டும் நாடக வழக்கன்றிப் பெரும்பான்மை உலகியல் வழக்கே கூறலின், இக்கந்தருவம் இக்களவியற்குச் சிறப்பன்று, இனிக்கூறுவன மெய்யுறுபுணர்ச்சி பற்றிய களவொழுக்கமாதலின்.
(8) களவிற்குரிய பொதுவிலக்கணம்
இவையெனல்
|