திணையென்றது அம் மூன்றனையுங் கொண்டே நிற்றலின். உ-ம்: ‘‘அறியே மல்லே மறிந்தன மாதோ பொறிவரிச் சிறைய வண்டின மொய்ப்பச் சாந்த நாறு நறியோள் கூந்த னாறுநின் மார்பே தெய்யோ’’
(ஐங்குறு.240) இது புறத்தொழுக்க மின்றென்றாற்குத் தோழி கூறியது. ’’புலிகொல் பெண்பாற் பூவரிக் குருளை வளைவெண் மருப்பிற் கேழல் புரக்குங் குன்றுகெழு நாடன் மன்றதன் பொன்போல் புதல்வனோ டென்னீத் தோனே’’
(ஐங்குறு.265) இது வாயில்களுக்குத் தலைவி கூறியது. ‘‘வன்கட் கானவன் மென்சொன் மடமகள் புன்புல மயக்கத் துழுத வேனற் பைம்புறச் சிறுகிளி கடியு நாட
பெரிய கூறி நீப்பினும் பொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே’’
(ஐங்குறு.283) இது தலைவன் ஆற்றாமை வாயிலாகப் புணர்ந்துழிப் பள்ளி யிடத்துச் சென்ற தோழி கூறியது. இவை
குறிஞ்சிக்கண் மருதம் நிகழ்ந்தன;
இவை ஓரொழுக்கம் நிகழ்தற்கு உரியவிடத்தே ஓரொழுக்கமும் நிகழ்ந்தன. ‘‘அன்னாய் வாழிவேண் டன்னையென் றோழி பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணை கொன்னே கடவுதி யாயி னென்னதூஉ மறிய வாகுமோ மற்றே முறியிணர்க் கோங்கம் பயந்த மாறே’’
(ஐங்குறு. 366) இஃது
இவ்வேறுபாடென்னென்ற செவிலிக்குத்
தோழி பூத்தரு புணர்ச்சியான் அறத்தொடு நிற்றல். இது
பாலையிற் குறிஞ்சி. இஃது உரிப்பொருளோடு உரிப் பொருண் மயங்கிற்று. மேல் வருவனவற்றிற்கும்
இவ்வாறு உய்த்துணர்ந்து கொள்க. ‘‘வளமலர் ததைந்த வண்டுபடு நறும்பொழின் முளைநிரை முறுவ லொருத்தியொடு நெருநற் குறிநீ செய்தனை யென்ப வலரே குரவ நீள்சினை யுறையும் பருவ மாக்குயிற் கௌவையிற் பெரிதே’’
(ஐங்குறு.369) இது
பொழிலிடத்து ஒருத்தியொடு தங்கிவந்தும் யான் பரத்தையை அறியேனென்றாற்குத் தோழி கூறியது. ‘‘வண்சினைக் கோங்கின் றண்கமழ் படலை யிருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப ‘‘நீநயந் துறையப் பட்டோள் யாவ ளோவெம் மறையா தீமே’’
(ஐங்குறு.370) இது பரத்தையர்க்குப் பூவணிந்தமை
கேட்ட தலைவி அஃதின்றென்றாற்குக் கூறியது. இவை பாலைக்கண் மருதம் நிகழ்ந்தன. ‘‘அருந்தவ மாற்றியார்’’ (கலி.30) என்னும் பாலைக்கலியும் அது. ‘‘அன்னை வாழிவேண் டன்னை யுது
|