களவிற்கு நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.’’
(குறுந்.47) இஃது
இரா வந்து ஒழுகுங்காலை முன்னிலைப் புறமொழியாக நிலாவிற்கு உரைப்பாளாய் உரைத்தது. இக் குறுந்தொகையுட் குறிஞ்சியுள் வேனில் வந்தது. ‘‘விருந்தின் மன்ன ரருங்கலந் தெறுப்ப’’ (அகம்.54) என்பது கார்காலத்து மீள்கின்றான் முகிழ்நிலாத்
திகழ்தற்குச் சிறந்த வேனிலிறுதிக்கண் தலைவிமாட்டு நிகழ்வன கூறி, அவை காண்டற்குக் கடிது தேரைச் செலுத்தென்றது. இது முல்லைகண் வேனில் வந்தது. ‘‘துஞ்சுவது போல விருளி விண்பக இமைப்பது போல மின்னி யுறைக்கொண்டு ஏறுவது போலப் பாடுசிறந் துரைஇ நிலம்நெஞ் சுட்கஓவாது சிலைத்தாங் கார்தளி பொழிந்த வார்பெயற் கடைநாள் ஈன்றுநா ளுலந்த வாலா வெண்மழை வான்றோ யுயர்வரை யாடும் வைகறைப் புதலே ரணிந்த காண்பின் காலைத் தண்ணறும் படுநீர் மாந்திப் பதவருந்து வெண்புறக் குடைய திரிமருப் பிரலை வார்மண லொருசிறைப் பிடவவிழ் கொழுநிழற் காமர் துணையோ டமர்துயில் வதிய அரக்குநிற வுருவின் ஈயர் மூதாய் பரப்பி யவைபோற் பாஅய்ப் பலவுடன் நீர்வார் மருங்கி னீரணி திகழ இன்னும் வாரா ராயின் நன்னுதல் யாதுகொல் மற்றவர் நிலையே காதலர் கருவிக் காரிடி யிரீஇய பருவ மன்றவர் வருதுமென் றதுவே’’
(அகம்.139) இது பிரிவிடையாற்றாது தோழிக்கு உரைத்தது. இம்
மணிமிடைபவளத்துப் பாலைக்கண் முன்பனியும் வைகறையும் ஒருங்கு வந்தன. ‘‘தொல்லெழில் வரைத்தன்றி வயவுநோய் நலிதலி னல்லாந்தா ரலவுற வீன்றவள் கிடக்கைபோற் பல்பய முதலிய பசுமைதீ ரகன்ஞாலம் புல்லிய புனிறொரீஇப் புதுநல மேர்தர வளையவர் வண்டல்போல் வார்மணல் வடுக்கொள விளையவ ரைம்பால்போ லெக்கர்போழ்ந் தறல்வார மாவீன்ற தளிர்மிசை மாயவ டிதலைபோ லாயிதழ்ப் பன்மல ரையகொங் குறைத்தர மேதக விளவேனி லிறுத்தந்த பொழுதின்கண்; இது தரவு. சேயார்கட் சென்றவென் னெஞ்சினைச் சின்மொழி நீகூறும் வரைத்தன்றி நிறுப்பென்மன் னிறைநீவி வாய்விரியு பனியேற்ற விரவுப்பன் மலர்தீண்டி நோய்சேர்ந்த வைகலான் வாடைவந் தலைத்தரூஉம்;
போழ்துள்ளார் துறந்தார்கட் புரிவாடுங் கொள்கையைச் சூழ்பாங்கே சுடரிழாய் கரப் |