நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3774
Zoom In NormalZoom Out


கானக்கோழியுஞ்     சிவலும்;  பறை,  ஏறுகோட்பறை; செய்தி, நிரை
மேய்த்தலும்  வரகு  முதலியன  களை கட்டலும் கடாவிடுதலும்; யாழ்,
முல்லையாழ்.  பிறவுமென்றதனான்,  பூ,  முல்லையும் பிடவுந் தளவுந்
தோன்றியும்; நீர் கான்யாறு; ஊர், பாடியுஞ் சேரியும் பள்ளியும்.

குறிஞ்சிக்கு  உணா, ஐவனநெல்லுந் தினையும் மூங்கிலரிசியும்; மா,
புலியும்  யானையுங்  கரடியும்  பன்றியும்;  மரம்,  அகிலும் ஆரமுந்
தேக்குந்  திமிசும் வேங்கையும்; புள், கிளியும் மயிலும்; பறை முருகிய
முந்   தொண்டகப்பறையும்;   செய்தி,  தேன்  அழித்தலுங்  கிழங்கு
அகழ்தலுந்   தினைமுதலியன   விளைத்தலுங்  கிளிகடிதலும்;  யாழ்.
குறிஞ்சி   யாழ்.  பிறவுமென்றதனான்,  பூ  காந்தளும்  வேங்கையுஞ்
சுனைக்கு  வளையும்;  நீர்,  அருவியுஞ்  சுனையும்; ஊர், சிறுகுடியுங்
குறிச்சியும்.

மருதத்திற்கு     உணா,   செந்நெல்லும்  வெண்ணெல்லும்;  மா,
எருமையும்   நீர்  நாயும்; மரம், வஞ்சியுங் காஞ்சியும் மருதமும்; புள்,
தாராவும்  நீர்க்கோழியும்;   பறை,  மணமுழவும்  நெல்லரிகிணையும்;
செய்தி,  நடுதலுங்  களைகட்டலும்  அரிதலுங்  கடாவிடுதலும்;  யாழ்,
மருதயாழ்.  பிறவுமென்றதனான், பூ, தாமரையுங் கழுநீரும்; நீர், யாற்று
நீரும் மனைக்கிணறும் பொய்கையும்; ஊர், உர்க ளென்பனவேயாம்.

நெய்தற்கு உணா, மீன்விலையும் உப்புவிலையும்; மா, உமண் பகடு
போல்வன;  முதலையுஞ்  சுறாவும் மீனாதலின் மாவென்றல் மரபன்று;
மரம்,  புன்னையும்  ஞாழலுங் கண்டலும்; புள் அன்னமும் அன்றிலும்
முதலியன;  பறை,  மீன்  கோட்பறை;  செய்தி, மீன்படுத்தலும் உப்பு
விளைத்தலும்   அவை   விற்றலும்;   யாழ்   நெய்தல்யாழ்.   பிறவு
மென்றதனான்,   பூ   கைதையும்   நெய்தலும்;  நீர்,  மணற்கிணறும்
உவர்க்குழியும்; ஊர், பட்டினமும் பாக்கமும்.

இனிப் பாலைக்கு உணா, ஆறலைத்தனவுஞ்  சூறைகொண்டனவும்;
மா வலியழிந்த யானையும் புலியுஞ் செந்நாயும்; மரம், வற்றி