நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3780
Zoom In NormalZoom Out


ருப்படுத்துவ லென்றது.

‘‘கணமா தொலைச்சித் தன்னையர் தந்த
நிணவூன் வல்சிப் படுபுள் ளோப்பும்
நலமா ணெயிற்றி போலப் பலமிக
நன்னல நயவர வுடையை
யென்னோற் றனையோ மாவீன் றளிரே.’’
   (ஐங்குறு.365)

இவ்   வைங்குறுநூறு  வரைவிடைவைத்துப்  பொகின்றான்  மாவினை
நோக்கிக் கூறியது. ஏனைப் பெயர்களில் வருவன வந்துழிக் காண்க.

‘‘முற்றா மஞ்சட் பசும்புறங் கடுப்பச்
சுற்றிய பிணர சூழ்கழி யிறவின்
கணங்கொள் குப்பை யுணங்குதிற நோக்கிப்
புன்னையங் கொழுநிழன் முன்னுய்த்துப் பரப்புந்
துறைநனி யிருந்த பாக்கமும் முறைநனி
யினிதும னளிதோ தானே துனிதுறந்
தகன்ற வல்கு லைதமை நுசுப்பின்
மீனெறி பரதவர் மடமகண்
மானேர் நோக்கங் காணா வூங்கே.’’          
(நற்.101)

இது  வரைதற்  பொருட்டுத் தலைவி வேறுபாட்டிற்கு ஆற்றாத தோழி
சிறைப்புறமாகக் கூறியது.

‘‘அறிகரி பொய்த்த லான்றோர்க் கில்லைக்
குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே
யிதற்கிது மாண்ட தென்னா ததற்பட்
டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்ச
மயிற்க ணன்ன மாண்முடிப் பாவை
நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படூஉங் கான லானே.’’
         (குறுந்.184)

இது கழறிய பாங்கற்குக் கூறியது.

‘‘கடுந்தே ரேறியுங் காலிற் சென்றும்....
என்நினை யுங்கொல் பரதவர் மகளே.’’
       (நற்.349)

என வரும். இது நற்றிணை.

‘‘இவளே,    கான  நண்ணிய  (45)  என்னும்  நற்றிணைப்  (45)
பாட்டினுட் ‘‘கடுந்தேர்ச் செல்வன் காதன் மகனே’’ என்று அவனருமை
செய்தயர்த்தலின்   அவனை    இகழ்ச்சிக்   குறிப்பான்  அறிவித்துக்
கூறினாள். ஏனைப் பெண்பெயர்க்கண் வருவனவும் வந்துழிக் காண்க.

‘‘ஏனோர்  பாங்கினும்’’ எனப் பொதுப்படக்கூறிய அதனான் மருத
நிலத்து  மக்களுட் டலைமக்கள் உளராகப் புலனெறி வழக்கஞ் செய்த
செய்யுள்கள் வந்தன உளவேற் கண்டுகொள்க. (22)

அடியோரும் வினைவலரும் தலைமக்களாதற் குரியரெனல்
 

23. அடியோர்