நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3787
Zoom In NormalZoom Out


பிரிதலுஞ்     சிறப்பின்மை  பெறுதும்.  அறங்  கருதாது   பொருள்
ஈட்டுதற்குப்   பிரிதலும்   பொருள்வயிற்   பிரிவிற்கு   உண்மையின்
இவற்றோடு  ஓதாது  பிற்கூறினார்.  அந்தணர்க்குரிய  ஓதலுந்  தூதம்
உடன் கூறிற்றிலர், பகைபிறந்தவழித் தூது நிகழ்தலின்.           (25)

பிரிவுள் ஓதலுந் தூதும் இவர்க்குரியவெனல்
 

26.அவற்றுள்,
ஓதலுந் தூதும் உயர்ந்தோர் மேன.
  

இது  முற்கூறியவற்றுள்  அந்தணர்  முதலிய  மூவர்க்கும்  இரண்டு
பிரிவு உரித்தென்கிறது.

(இ-ள்)   அவற்றுள் - அம்மூன்றனுள்; ஓதலும் தூதும் உயர்ந்தோர்
மேன - ஓதற்பிரிவுந்  தூதிற்பிரிவும் அந்தணர்  முதலிய  மூவரிடத்தன
எ-று.

எனவே, ஒழிந்த பகைவயிற் பிரிவு  அரசர்க்கே உரித்தென மேலே
கூறுப. உயர்ந்தோரெனக் கூறலின் வேளாளரை ஒழித்தாரென்றுணர்க.

உ-ம்:

‘‘அரம்போ ழவ்வளை தோணிலை ஞெகிழ
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
ஈர்ங்கா ழன்ன அரும்புமுதி ரீங்கை
ஆலி யன்ன வால்வீ தாஅய்
வைவா லோதி மையணல் ஏய்ப்பத்
தாதுறு குவளைப் போதுபிணி யவிழப்
படாஅப் பைங்கட் பாவடிக் கயவாய்க்
கடாஅம் மாறிய யானை போலப்
பெய்துவறி தாகிய பிறங்குசெலற் கொண்மூ
மைதோய் விசும்பின் மாதிரத் துழிதரப்
பனியடூஉ நின்ற பானாட் கங்குல்
தமியோர் மதுகை தூக்காய் தண்ணென
முனிய அலைத்தி முரணில் காலைக்
கைதொழு மரபிற் கடவுள் சான்ற
செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின்
விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்
வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலை செல்லார்
சூடா வாகைப் பறந்தலை ஆடுபெற
ஒன்பது குடையும் நன்பக லொழித்த
பீடில் மன்னர் போல
ஓடுவை மன்னால் வாடைநீ யெமக்கே.’’
      (அகம்.125)

இதனுட்     பலருங்    கைதொழும்    மரபினையுடைய    கட
வுட்டன்மையமைந்த செய்வினையெனவே ஓதற்பிரிதலெ