‘‘பகையறு பயவினை’’ என்பதற்குப் பகையறுதற்குக் காரணமாகிய நாடாகிய பயனைத் தரும் வினையெனவும், ‘‘வேட்டபொருள்’’ என்பதற்கு அறம்பொருள் இன்பம் எனவும் பொருளுரைத்துக் கொள்க. பிறவும் இவ்வாறு வருவன உய்த்துணர்ந்து பொருள் கூறுக. இனிக், ‘‘கேள்கே டூன்றவுங் கிளைஞ ராரவுங் கேளல் கேளிர் கெழீஇயின ரொழுகவு மாள்வினைக் கெதிரிய வூக்கமொடு புகல்சிறந்து.’’
(அகம்.93) என வாணிகர் பொருள்வயிற் பிரிந்தவா றுணர்க. ‘‘நட்டோ ராக்கம் வேண்டியு மொட்டிய நின்றோ ளணிபெற வரற்கு மன்றோ தோழியவர் சென்ற திறமே.’’
(நற்.286) என்பதனுள் அணியென்றது பூணினை. பிறவும் இவ்வாறு வருவன உயத்துணர்ந்து கொள்க.
(28) பொருட்பிரிவு நால்வர்க்கு முரித்தாதல்
|