நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3798
Zoom In NormalZoom Out


மை இன்மை யான.
 

இஃது    இத்துணையும் பாலைக்கு உரிய இலக்கணங் கூறி, மகடூஉ
அதிகாரப்படுதலிற்    பெருந்திணைக்கு    உரியதோர்   இலக்கணங்
கூறுகின்றது.

(இ-ள்.)     எத்திணை    மருங்கினும்    -    கைக்கிளைமுதற்
பெருந்திணையிறுவாய்  ஏழன்கண்ணும்;  மகடூஉ  மடல்மேல் நெறிமை
-தலைவி  மடலேறினாளாகக் கூறும் புலனெறிவழக்கம்; பொற்புடைமை
இன்மையான  -  பொலிவுடைமையின்று; ஆதலான் அது கூறப்படாது
எ-று.

‘‘கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்’’ 
            (குறள்.1137)

எனவரும்.

‘‘கடலன்ன காமத்த ராயினும் பெண்டிர்
மடலூரார் மைந்தர்மே லென்ப - மடலூர்தல்
காட்டுகேன் வம்மின் கலிவஞ்சி யார்கோமான்
வேட்டமா மேல்கொண்ட போழ்து’’

என்றாராலோவெனின்,   இது   மடலேற்றன்று;  ஏறுவலெனக்  கூறிய
துணையாம்.

உடன்போக்கின்கண் நற்றாயிரங்கற் பகுதிகளாவன
 

36. தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி
மன்னு நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம்
நன்மை தீமை யச்சஞ் சார்தலென்று
அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ
முன்னிய காலம் மூன்றுடன் விளக்கித்
தோழி தேஎத்துங் கண்டோர் பாங்கினும்
போகிய திறத்து நற்றாய் புலம்பலும்
ஆகிய கிளவியும் அவ்வழி யுரிய.
 

இது     பிரிவிலக்கணம்   அதிகாரப்பட்டு   வருதலிற்  கொண்டு
தலைக்கழிந்துழி  வருந்துவோர்  தாயரென்பதூஉம்  அதனது பகுதியுங்
கூறுகின்றது.

(இ-ள்)    போகிய  திறத்து  நற்றாய்.   தலைவியுந்  தலைவனும்
உடன்போய  காலத்து  அம்மகட்  பயந்த நற்றாய்;  தன்னும் அவனும்
அவளுஞ்   சுட்டிக்   காலம்  மூன்றுடன்  மன்னும்   நன்மை  தீமை
முன்னிய  விளக்கிப்  புலம்பலும்,   தன்மையும்  தலைவனையுந்  தன்
மகளையுங் குறித்துக் காலம் மூன்றுடன் நிலைபெற்று  வரும் நல்வினை
தீவினைக்குரிய  காரியங்களைத்  தன்  நெஞ்சிற்கு  விளக்கி வருந்திக்
கூறுதலும்; அச்சஞ் சார்தல் என்று அன்ன  பிறவும் நிமித்தம் மொழிப்
பொருள்  தெய்வம்  அவற்றொடு  தொகைஇப்  புலம்பலும்.  அச்சஞ்
சார்தலென்று  கூறப்பட்டவற்றையும்  அவை போல்வன பிறவற்றையும்
பல்