லி முதலிய சொல் நற்சொல் தெய்வங்
கட்டினுங் கழங்கினும் இட்டு உரைக்கும் அத்தெய்வப் பகுதியென்றவற்றொடு கூட்டி வருந்திக் கூறலும்; தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும் புலம்பலும். தோழியது ஆற்றாமையைக் கண்டுழியுந், தலைவியைத் தேடிப் போய்க் காணாது வந்தாரைக் கண்டுழியும் வருந்திக் கூறலும்; அவ்வழி ஆகிய கிளவியும், அவ்வுடன் போக்கிடத்துச் சான்றோராற் புலனெறி வழக்கஞ் செய்தற்குரியவாய் வருங் கிளவிகளும்; உரிய. உடன்போகிய திறத்து உரிய எ-று. நற்றாய்
புலம்பலுங் கிளவியும் போகியதிறத்து உரிய வென முடிக்க. என்றென்பதனையும் புலம்பலென்பதையும்
யாண்டுங் கூட்டுக. இங்ஙனம் உடன்போக்கி வருந்துதல் நோக்கித் தாயை முற்கூறித் தலைவன் கொண்டு போயினமை நோக்கித் தலைவி முன்னர் அவனைக் கூறினார். ‘அவளும் அவனும் என்று பாடம் ஓதுவாரும் உளர். உதாரணம், ‘‘மள்ளர் கொட்டின் மஞ்ஞை யாலும் உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச் சுரநனி யினிய வாகுக தில்ல அறநெறி யிதுவெனத் தெளிந்தவென் பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே’’
(ஐங்.371) இதனுள்,
‘அறநெறி இதுவெனத் தெளிந்த என்மக’ ளென்று தாய் கூறவே, உடன்போக்குத் தருமமென்று மகிழ்ந்து கூறி அங்ஙனங் கூட்டிய நல்வினையைத் தன் நெஞ்சிற்கு விளக்கிப் புலம்பியவாறு காண்க. ‘‘நாடொறுங் கலுழு மென்னினு மிடைநின்று காடுபடு தீயிற் கனலியர் மாதோ நல்வினை நெடுநகர் கல்லெனக் கலங்கப் பூப்புரை யுண்கண் மடவரற் போக்கிய புணர்ந்த வறனில் பாலே’’
(ஐங்.376) இது
தீவினையை வெகுண்டு புலம்பியவாறு காண்க. பால். பழவினை. இவை ஐங்குறுநூறு. இனி
அச்சம் இருவகைத்து; தலைவி ஆண்டை விலங்கும் புள்ளும் ஆறலைப்போரும் முதலிய
கண்டு அஞ்சும் அச்சமுந், தந்தை தன்னையர்
பின்சென்றவர்
இஃதறமென்னாது தீங்கு செய்கின்றாரோ
என்று அஞ்சும் அச்சமுமென. ‘‘நினைத்தொறுங் கலுழு மிடும்பை யெய்துக புலிக்கோட் பிழைத்த கவைக்கோட்டு முது |