ந்
தீமே’’ (ஐங்குறு.391) இவ்
வைங்குறுநூறு நிமித்தத்தொடு
படுத்துப் புலம்பியது. நற்சொல்லொடு படுத்தன
வந்துழிக் காண்க. இனி
‘அன்ன பிறவு’ மென்றதனான். ‘‘ஈன்று
புறந்தந்த எம்மும் உள்ளாள்
வான்றோய் இஞ்சி நன்னகர் புலம்பத்
தனிமணி இரட்டுந் தாளுடைக் கடிகை
நுழைநுதி நெடுவேற் குறும்படை மழவர்
முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த
வல்லேர் வாழ்க்கை விழுத்தொடைமறவர்
வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார்
நடுகற் பீலி சூட்டித் துடிபடுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரந்
துணிந்துபிறள் ஆயினள் ஆயினும் அணிந்தணிந்
தார்வ நெஞ்சமோ டாய்நலன் அளைஇத்தன்
மார்புதுணை யாகத் துயிற்றுக தில்ல
துஞ்சா முழவிற் கோவற் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப்
பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கு
நெறியிருங் கதுப்பினென் பேதைக்
கறியாத் தேஎத் தாற்றிய துணையே’’
(அகம்.35) இவ்வகம்
தலைவன் மிகவும் அன்புசெய்கவென்று தெய்வத்திற்குப் பராஅயது. ‘‘நீர்நசைக்
கூக்கிய வுயவல் யானை
யியம்புணர் தூம்பி னுயிர்க்கு மத்தஞ்
சென்றனண் மன்றவென் மகளே
பந்தும் பாவையுங் கழங்குமெமக் கொழித்தே’’
(ஐங்குறு.377) இவ் வைங்குறுநூறு யாம்
இவற்றைக்கண்டு வருத்த இவற்றை எமக்கு
ஒழித்துத் தான் நீரிலா ஆரிடைப் போயினா ளென்றது. ‘‘என்னு
முள்ளினள் கொல்லோ தன்னை
நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையோ
டழுங்கன் மூதூ ரலரெழச்
செழும்பல் குன்ற மிறந்தவென் மகளே’’ (ஐங்குறு.372) இஃது என்னை நினைப்பாளோவென்றது. இன்னும்
இதனானே, செய்யுள்களுள்
இவற்றின் வேறுபட வருவனவெல்லாம்
அமைத்துக் கொள்க. ‘‘செல்லிய
முயலிற் பாஅய சிறகர்
வாவ லுகக்கு மாலையாம் புலம்பப்
போகிய வவட்கோ நோவேன் றேமொழித்
துணையிலள் கலுழு நெஞ்சின்
இணையே ருண்க ணிவட்குநோ வதுவே’’ (ஐங்குறு.378) இது
தோழி தேஎத்துப் புலம்பல். இஃது ஐங்குறுநூறு.
|