சூடித்
தருமணற் கிடந்த பாவையென்
அருமக ளேயென முயங்கின ளழுமே’’
(அகம்.165) இம்
மணிமிடைபவளத்துத் தாய்
நிலையும் ஆய்த்து நிலையுங் கண்டோர்
கூறியவா றுணர்க. ‘‘மாண்பில்
கொள்கையொடு மயங்குதுயர் செய்த
வன்பி லறனு மருளிற்று மன்ற
வெஞ்சுர மிறந்த அஞ்சி லோதி
பெருமட மான்பிணை யலைத்த
சிறுநுதற் குறுமகட் காட்டிய வம்மே’’
(ஐங்குறு.394) இவ்
வைங்குறுநூறு தலைவி மீண்டு வந்துழித்
தாய் சுற்றத்தார்க்குக் காட்டியது. ‘‘நும்மனைச்
சிலம்பு கழீஇ யயரினு
மெம்மனை வதுவை நன்மணங் கழிகெனச்
சொல்லி னெவனோ மற்றே வென்வேன்
மையற விளங்கிய கழலடிப்
பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே’’
(ஐங்குறு.399) இவ்
வைங்குறுநூறு தலைவன் மீண்டு
தலைவியைத் தன் மனைக்கட்
கொண்டுவந்துழி அவன்தாய்
சிலம்புகழீஇ நோன்பு செய்கின்றாளெனக்
கேட்ட நற்றாய் ஆண்டுநின்றும்
வந்தார்க்குக் கூறியது. இன்னுஞ் சான்றோர்
செய்யுள்களுள் வேறுபட வருவனவெல்லாம் இதனான்
அமைக்க. சேரியுஞ் சுரத்தும்
தேடிச் செல்லும் தாயரும் உண்மை
|