வோன்
பழையன் வேல்வாய்த் தன்னநின்
பிழையா நன்மொழி தேறிய விவட்கே’’
(நற்.10) இந்
நற்றிணை தலைவியைப்
பாதுகாக்கவெனத் தோழி கையடைப்படுத்துவித்தது. ‘‘புதல்வனீன்ற’’
(நற்.355) என்பதும் அது. ‘‘இவளே நின்னல திலளே யாயுங்
குவளை யுண்க ணிவளல திலளே
யானு மாயிடை யேனே
மாமலை நாட மறவா தீமே’’ இதுவும் அது. ‘‘விளம்பழங் கமழுங் கமஞ்சூற் குழிசி
பாசந் தின்ற தேய்கான் மத்தம்
நெய்தெரி யியக்கம் வெளின்முதன் முழங்கும்
வைகுபுலர் விடியன் மெய்கரந்து தன்கா
லரியமை சிலம்பு கழீஇப் பன்மாண்
வரிப்புனை பந்தொடு வைஇய செல்வோ
ளிவைகாண் டோறும் நோவர் மாதோ
வளியரோ வளியரென் னாயத் தோரென
நும்மொடு வரவுதா னயரவுந்
தன்வரைத் தன்றியுங் கலுழ்ந்தன கண்ணே.’’
(நற்.12) இந் நற்றிணை
போக்குதல் தவிர்ந்ததாம். ‘‘அவளே,
யுடனம ராயமோ டோரை வேண்டாது
மடமான் பிணையின் மதர்த்த நோக்கமோ
டென்னினு நின்னினுஞ் சிறந்த மென்மொழி
யேதி லாளன் காதலி னானாது
பால்பாற் படுப்பச் சென்றன ளதனான்
முழவிமிழ் பந்தர் வினைபுனை நல்லில்
விழவயர்ந் திருப்பி னல்லதை யினியே
நீயெவ னிரங்குதி யன்னை
யாயினுஞ் சிறந்த நோய்முந் துறத்தே.’’ என்னினும்
நின்னினுஞ் சிறந்தோன் தலைவ னென்று தவிர்தல் தருமநூல்விதி என்பது. இனி ‘விழவயர்ந்திருப்பினல்லதை’ எனவே மீட்டற்குச்
சேறல் அறனன் றென்று மீட்டாளாயிற்று. ‘‘அன்னை வாழியோ
வன்னை நின்மக
ளென்னினும் யாயினு நின்னினுஞ் சிறந்த
தன்னம ரிளந்துணை மருட்டலின் முனாஅது
வென்வேற் புல்லி வேங்கட நெடுவரை
மழையொடு மிடைந்த வயக்களிற் றருஞ்சுரம்
விழைவுடை யுள்ளமோ டுழைவயிற் பிரியாது
வன்கண் செய்து சென்றனள்
புன்கண் செய்தல் புரைவதோ வன்றே.’’ இது
தாயை வற்புறுத்தியது. ‘இயல்புற’ என்றதனானே தலைவன் கரணவகையான்
வரைந்தானாக எதிர்சென்ற தோழிக்கு யான்
வரைந்தமை நுமர்க்குணர்த்தல் வேண்டுமென்
|