நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3809
Zoom In NormalZoom Out


றாற்கு  அவள்  உணர்த்தினே  னென்றலுந்  தலைவி மீண்டு வந்துழி
ஊரது நிலைமை கூறுதலுங் கொள்க.

‘‘கருவிரன் மந்திக் கல்லா விளம்பார்ப்பு
இருவெதி ரீர்ங்கழை யேறிச் சிறுகோன்
மதிபுடைப் பதுபோற் றோன்று நாட
வரைந்தனை நீயெனக் கேட்டியா
னுரைத்தனெ னல்லனோ வஃதென்யாய்க்கே’’
(ஐங்குறு.280)

புள்ளு மறியாப் பல்பழம் பழுனி
மடமா னறியாத் தடநீர் நிலைஇச்
சுரநனி யினிய வாகுக வென்று
நினைத்தொறுங் கலுழு மென்னினு
மிகப்பெரிது கலங்கின்று தோழிநம் மூரே.’’  (ஐங்குறு.398)

இன்னும்,    இதனானே   செய்யுட்கண்   வேறுபட  வருவன வெல்லாம் அமைத்துக்கொள்க.

‘‘ஊஉ ரலரெழச் சேரி கல்லென
ஆனா தலைக்கு மறனி லன்னை
தானே யிருக்கத்தன் மனையே யானே
நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க
உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு
விண்டொட நிவந்த விலங்குமலைக் கவாஅற்
கரும்புநடு பாத்தி யன்ன

பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே.’’      
(குறுந்.262)
 

இது போக்கு நேர்ந்தமை தோழி கூறியது. பிறவுமன்ன.       (39)

கொண்டுதலைக்கழிந்துழிக் கண்டோர் கூற்றுக்கள் நிகழுமாறு
 

40.

பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி
வழுவி னாகிய குற்றங் காட்டலும்
  
ஊரது சார்வுஞ் செல்லுந் தேயமும்
  
ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவியும்
  
புணர்ந்தோர் பாங்கிற் புணர்ந்த நெஞ்சமோடு
  
அழிந்தெதிர் கூறி விடுப்பினு மாங்கத்
  
தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினுஞ்
  
சேய்நிலைக் ககன்றோர் செலவினும் வரவினுங்
  
கண்டோர் மொழிதல் கண்ட தென்ப.

 

இது,  கொண்டுதலைக்கழிந்துழி  இடைச்சுரத்துக்  கண்டோர்  கூறுவன கூறுகின்றது.

(இ-ள்.)     பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி   வழுவின் ஆகிய குற்றம்  காட்டலும்  -  உடன்போயவழி   மாலைக்காலமுஞ்
சேறற்கரிய  வழியும்    அஞ்சுவரக்    கூறி,   அவற்றது    தீங்கு
காரணமாகப்    போகின்றார்க்கு  வரும்    ஏதம்    அறிவித்தலும்; 
ஊரது சார்வும்     செல்லும்  தேயமும்   ஆர்வ     நெஞ்சமொடு  
செப்பிய  கிளவியும்    -    எம்மூர்   அணித்தெனவும்      நீர்
செல்லுமூர்   சேய்த்தெனவும்   அன்புடை  நெஞ்சத்தாற்    கூறுங்
கூற்றுக்களும்; புணர்ந்தோர் பாங்கின்  புணர்ந்த      நெஞ்சமோடு
அழிந்து   எதிர்   கூறி   விடுப்பினும்  -  புணர்ந்து உடன்போய
இருவர்கண்ணுந்   தணவா  நெஞ்சினராகி  ஆற்றாமை     மீதூர
ஏற்றுக்கொண்டு