நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3814
Zoom In NormalZoom Out


ரெனவே     தந்தை  தன்னையரை  உணர்த்திற்று.     ‘‘முன்னர்த்
தாய்நிலை கண்டு தடுப்பினு’’ (40) மென்றலின், தாயர்தாமே சென்றமை
முன்னத்தாற்  றமர் உணர்ந்து, வலிதிற்கொண்டு அகன்றானோ வென்று
கருதியும்  அவ்வரைவு  மாட்சிமைப்படுத்தற்கும்  பின்சென்று அவள்
பெயராமற் கற்பொடு புணர்ந்தமை கண்டு, தலைவன் எடுத்துக்கொண்ட
வினைமுடித்தலும்   ஒருதலை   யென்றுணர்ந்து,  பின்னர்  அவரும்
போக்குடன்பட்டு  மீள்பவென்று கொள்க. அவ்வெளிப்பாடு கற்பாதலிற்
கற்பென்றார்.   ‘உளப்பட’   வென்றதனான்  வலித்தலும்  விடுத்தலும்
அகப்பட வென்றாராயிற்று.
    

நாளது     சின்மையும் இளமையது அருமையும் தாளாண் பக்கமும்
தகுதியது அமைதியும் இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும்
அன்பினது    அகலமும்    அகற்சியது    அருமையும்    ஒன்றாப்
பொருள்வயின்   ஊக்கிய   பாலினும்  -  வாழ்க்கைநாள்  சிலவாதல்
ஏதுவாகப்   பொருள்   செய்தல்  குறித்தாரை  இளமையது  அருமை
இன்பத்தின்கண்ணே  ஈர்த்து  ஒன்றாமையும்,  மடியின்மை ஏதுவாகப்
பொருள்செயல்   குறித்தாரை   யாதானும்   ஓர்  ஆற்றாற்  பொருள்
செய்யலாகாது,  தத்தம் நிலைமைக் கேற்பச் செயல்வேண்டு மென்னுந்
தகுதியதமைதி   ஒன்றாமையும்,   இன்மையான்   வரும்   இளிவரவு
நினைத்துப்    பொருள்செய்ய   நினைந்தாரைப்   பொருளுடைமைக்
காலத்து   நிகழும்   உயர்ச்சி  அதற்கு  இடையூறாகிப்  பொருணசை
யுள்ளத்தைத்  தடுத்து  ஒன்றாமையும்,  பிரிந்துழி நிகழும் அன்பினது
அகலங்  காரணமாகப்  பொருள்செய்யக்  குறித்தாரைப் பிரிவாற்றாமை
யிடைநின்று  தடுத்து  ஒன்றாமையுமாய், ஒன்று ஒன்றனோடு ஒன்றாது
வரும்   பொருட்டிறத்துப்   பிரிதற்குத்  தலைவன்  உள்ளம்  எடுத்த
பகுதிக்கண்ணும்;
   

எனவே,  நாளது சின்மையுந் தாளாண்பக்கமும் இன்மைய திளிவும்
அன்பின  தகலமும்  பொருள் செயல்வகைப்பால ஆதலும், இளமைய
தருமையுந்  தகுதிய  தமைதியும்  உடைமைய  துயர்ச்சியும் அகற்சிய
தருமையும்   இன்பத்தின்பால   ஆதலுங்   கூறினார்.  இவ்வெட்டும்
பொருள் செயற்கு ஒன்றா வென்னாமோ எனின், வாழ்நாள் சிறிதென்று
உணர்ந்து   அதற்குள்ளே   பொருள்   செய்து  அறமும்  இன்பமும்
பெறுதற்குக்  கருதிய  வழி,  ஆண்டு  முயற்சியும் இன்மையான்வரும்
இளிவரவும் அதற்கு ஒருப்படுத்துங் கருவியாதலானும், பொருள் பின்பு
அன்பிற்குப் பெருக்கந் தருமாதலானும், இந்நான்கும்