யாழநின்
னலமென் பணைத்தோ ளெய்தின மாகலிற்
பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி
சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி
நிழல்காண் டோறு நெடிய வைகி
மணல்காண் டோறும் வண்ட றைஇ
வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே
மாநனை கொழுதி மகிழ்குயி லாலும்
நறுந்தண் - பொழில கானங்
குறும்பல் லூரயாஞ் செல்லு மாறே’’
(நற்.9) என வரும். இது புணர்ச்சி மகிழ்ந்தபின் வழிவந்த நன்மை கூறி வருந்தாது ஏகென்றது. இது
நற்றிணை. பிறவும்
வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க. ‘‘இரும்புலிக் கிரிந்த கருங்கட்
செந்நாகு
நாட்டயிர் கடைகுரல்கேட்டொறும் வெரூஉம்
மாநிலைப் பள்ளி யல்க நம்மொடு
மானுண் கண்ணியும் வருமெனின்
வாரார் யாரோ பெருங்க லாறே’’ இது
விடுத்தற்கட் கூறியது. ‘‘வினையமை
பாவையி னியலி நுந்தை
மனைவரை யிறந்து வந்தனை யாயிற்
றலைநாட் கெதிரிய தண்பத வெழிலி
யணிமிகு கானத் தகன்புறம் பரந்த
கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும்
நீவிளை யாடுக சிறிதே யானே
மழகளி றுரிஞ்சிய பராரை வேங்கை
மணலிடு மருங்கி னிரும்புறம் பொருந்தி
யமர்வரி னஞ்சேன் பெயர்க்குவெ
னுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே.’’
(நற்.362) இது நற்றிணை. ‘‘நுமர்வரி னோர்ப்பி னல்ல
தமர்வரின்
முந்நீர் மண்டில முழுது மாற்றா
தெரிகணை விடுத்தலோ விலனே
யரிமதர் மழைக்கண் கலுழ்வகை யெவனே.’’ இவை தமர் வருவரென ஐயுற்றுக் கூறியன. அவர் வந்து
கற்பொடுபுணர்ந்தன வந்துழிக்காண்க. ‘‘அரிதாய வறனெய்தி யருளியோர்க்
களித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப்
பிரிவெண்ணிப் பொருள்வயிற் பெயர்ந்தநங்
காதலர்
வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎளனி’’
(கலி.11) இதனுள்
‘என’ வென்றதனாற் றலைவன் கூற்றுப் பெற்றாம்.
இது ‘மூன்றன் பகுதி’. ‘‘புகழ்சால் சிறப்பிற் காதலி
புலம்பத்
துறந்துவந் தோயே யருந்தொழிற் கட்டூர்
நல்லேறு தழீஇ நாகுபெயர் காலை
யுள்ளுதொறுங் கலிழு நெஞ்சம்
வல்லே யெம்மையும் வரவிழைத் தனையே’’ (ஐங்குறு.445) இது பகைவயிற்
பிரிந்தோன் பருவங்கண்டு
தலைவியை
நினைந்து நெஞ்சொடு புலம்பியது. ‘‘முல்லை நாறுங் கூந்தல்
கமழ்கொள
நல்ல காண்குவ மாஅ யோயே
பாசறை ய |