நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4899
Zoom In NormalZoom Out


ளையாடாமையின்.  அங்ஙனம்  வந்த  செய்யுளுளவேல் அவற்றையுங்
கொள்க.

‘‘கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்மில் பெருமொழி கூறித் தம்மில்
கையுந் காலுந் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.’’     (குறுந்.8)

இது குறுந்தொகை

புறனுரைத்தாளெனக்     கேட்ட  பரத்தை தலைவனை நெருங்கித்
தலைவன் பாங்காயினார் கேட்ப உரைத்தது. இது முதுவேனில் வந்தது.

‘‘அரிபெய் சிலம்பி னாம்பலந் தொடலை
அரம்போ ழவ்வளைப் பொலிந்த முன்கை
இழையணி பணைத்தோ ளையை தந்தை
மழைவளந் தரூஉ மாவண் தித்தன்
பிண்ட நெல்லின் உறந்தை யாங்கண்
கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தங்
குழைமா ணொள்ளிழை நீவெய் யோளொடு
வேழ வெண்புணை தழீஇப் பூழியர்
கயநா டியானையின் முகனமர்ந் தாஅங்
கேந்தெழி லாகத்துப் பூந்தார் குழைய
நெருந லாடினை புனலே யின்றுவந்
தாக வனமுலை யரும்பிய சுணங்கின்
மாசில் கற்பிற் புதல்வன் தாயென
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம்
முதுமை யெள்ளலஃதமைகுந் தில்ல
சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத்
தந்தூம்பு வள்ளை யாய்கொடி மயக்கி
வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய்
முள்ளரைப் பிரம்பின் மூதரிற் செறியும்
பல்வேன் மத்தி கழாஅ ரன்னவெம்
இளமை சென்று தவத்தொல் லஃதே
இனிமையெவன் செய்வது பொய்ம்மொழி யெமக்கே.’’
                                       (அகம்.6)

பரத்தையொடு புனலாடி வந்தமைகேட்டுத்  தலைவி புலந்தது. இது
இளவேனில் வந்தது. ஏனைய வந்தவழிக் காண்க.

நாடகவழக்கானன்றி  உலகியல்  வழக்கானும்  அச் சிறு பொழுது
அப்பெரும்பொழுதிற்குப் பொருந்து மென்றற்குத் ‘தோன்று’ மென்றார்.
இதன்   பயன்  இவ்விரண்டு  நிலத்துக்கு  மற்றை  மூன்ற  காலமும்
பெரும்பான்மை வாராதென்றலாம்.                           (8)

பாலைக்குரிய காலம்