நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4905
Zoom In NormalZoom Out


இம்     மணிமிடை   பவளத்துப்  பின்பனி  வந்தவாறும்  நண்பகல்
கூறாமையும்   அவர்  குறித்தகாலம்  இதுவென்பது  தோன்றியவாறுங்
காண்க.

‘‘குன்ற வெண்மண லேறி நின்றுநின்று
இன்னுங் காண்கம் வம்மோ தோழி
களிறுங் கந்தும் போல நளிகடற்
கூம்புங் கலனுந் தோன்றுந்
தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே’’

வருகின்றாரெனக்     கேட்ட தலைவி  தோழிக்கு உரைத்தது. இது
பின்பனி  நின்ற  காலம்  வரைவின்றி  வந்தது. கடலிடைக் கலத்தைச்
செலுத்துதற்கு உரிய காற்றொடு பட்ட காலம் யாதானுங் கொள்க. ‘ஆகு’
மென்றதனான்   வேதவணிகரும்   பொருளின்றி   இல்லறம்  நிகழாத
காலத்தாயிற்   செந்தீ  வழிபடுதற்கு  உரியோரை  நாட்டிக்  கலத்திற்
பிரிதற்கு உரியரென்று கொள்க.

மேலனவற்றிற்குப் புறனடை
 

12. திணைமயக் குறுதலுங் கடிநிலை இலவே
நிலனொருங்கு மயங்குதல் இன்றென மொழிப
புலனன் குணர்ந்த புலமை யோரே.
 

இஃது உரிப்பொருள்   மயங்கு   மென்றலின்   மேலனவற்றிற்குப்
புறனடை.

(இ-ள்)  திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே ‘மாயோன் மேய’
(5)  என்பதனுள்   ஒரு  நிலத்து ஓரொழுக்கம் நிகழுமென நினைத்துக்
கூறிய  ஒழுக்கம்  அவ்வந்நிலத்திற்கே  உரித்தா  யொழுகாது தம்முள்
மயங்கிவருதலும்  நீக்கப்படா;  நிலன் ஒருங்கு மயங்குதல் இன்று என
மொழிப   -   அங்ஙனம்   ஒருநிலத்து  இரண்டொழுக்கந்  தம்முள்
மயங்குதலன்றி  இரண்டு  நிலம் ஒரோவொழுக்கத்தின்கண் மயங்குதல்
இல்லை  என்று  கூறுவர்;  புலன்  நன்கு  உணர்ந்த  புலமையோர்-
அங்ஙனம்  நிலனும்  ஒழுக்கமும்  இயைபுபடுத்துச் செய்யும் புலனெறி
வழக்கத்தினை. மெய் பெற உணர்ந்த அறிவினையுடையோர் எ-று.

என்றது,  ஒரு   நிலத்தின்கண்  இரண்டு  உரிப்பொருள்  மயங்கி
வருமென்பதூஉம்,  நிலன்  இரண்டு  மயங்காவெனவே காலம் இரண்டு
தம்முள் மயங்குமென்பதுஉங் கூறினாராயிற்று. ஆகவே, ஒரு