யோரே.’’
(அகம்.264)
இது தோழிக்குத் தலைவி கூறியது.
இம் மணிமிடைபவளத்துள் முல்லையுட் கூதிர் வந்தது.
‘‘மங்குல் மாமழை விண்ணதிர்பு முழங்கித் துள்ளுப்பெயல் கழிந்த பின்றைப் புகையுறப் புள்ளிநுண் துவலை பூவகம் நிறையக் காதலர் பிரிந்த கையறு மகளிர் நீர்வார் கண்ணிற் கருவிளை மலரத் துய்த்தலைப் பூவின் புதலிவர் ஈங்கை நெய்தோய்த் தன்ன நீர்நனையந்தளிர் இருவகிர் ஈருளின் ஈரிய துயல்வர அவரைப் பைம்பூப் பயில அகல்வயற் கதிர்வார் காய்நெல் கட்கினி திறைஞ்சச் சிதர்சினைத் தூங்கும் அற்சிர அரைநாட் காய்சின வேந்தன் பாசறை நீடி நந்நோ யறியா அறனி லாளர் இந்நிலை களைய வருகுவர் கொல்லென ஆனா தெறிதரும் வாடையொடு நோனேன் தோழியென் தனிமை யானே’’
(அகம்.294)
இது பருவ வரவின்கண் வற்புறுத்துந் தோழிக்குத் தலைவி கூறியது.
இம்
மணிமிடைபவளத்து முல்லையுள் முன்பனி வந்தது.
நிலமுங் கருவும் மயங்கின.
‘‘கருங்கால் வேங்கை வீயுகு துறுக லிரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை யெல்லி வருநர் களவிற்கு நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.’’
(குறுந்.47)
இஃது இரா வந்து
ஒழுகுங்காலை முன்னிலைப் புறமொழியாக நிலாவிற்கு உரைப்பாளாய் உரைத்தது.
இக் குறுந்தொகையுட் குறிஞ்சியுள் வேனில் வந்தது.
‘‘விருந்தின் மன்ன ரருங்கலந் தெறுப்ப’’
(அகம்.54)
என்பது கார்காலத்து மீள்கின்றான் முகிழ்நிலாத் திகழ்தற்குச்
சிறந்த வேனிலிறுதிக்கண் தலைவிமாட்டு நிகழ்வன கூறி, அவை காண்டற்குக் கடிது தேரைச் செலுத்தென்றது.
இது முல்லைகண் வேனில் வந்தது.
‘‘துஞ்சுவது போல விருளி விண்பக இமைப்பது போல மின்னி யுறைக்கொண்டு ஏறுவது போலப் பாடுசிறந் துரைஇ நிலம்நெஞ் சுட்கஓவாது சிலைத்தாங் கார்தளி பொழிந்த வார்பெயற் கடைநாள் ஈன்றுநா ளுலந்த வாலா வெண்மழை வான்றோ
|