இது முற்கூறிய
ஐந்தனுட் பாலைக்கட் குறிஞ்சி மயங்குமாறும் நெய்தன் மயங்குமாறுங் கூறுகின்றது.
(இ-ள்) கொண்டு தலைக்கழியினும், தலைவன் தலைவியை உடன்கொண்டு அவள் தமரிடத்து நின்று பிரியினும்; பிரிந்து அவண் இரங்கினும் - தலைவன் உடன்கொண்டு போகாது தானே போதலின் தலைவி மனையின்கண் இருந்து இரங்கினும்; ஓரிடத்தான - இவ்விரண்டும் ஓரிடத்தின்கண்ணே ஓரொழுக்கமாயின;
உண்டென மொழிப - இவ்வொழுக்கந்தான் நான்கு வருணத்திலும்
வேளாண் வருணத்திற்கு உண்டென்று சொல்லுவர் ஆசிரியர் எ-று.
கொண்டு தலைக்கழிதலான் இடையூறின்றிப்
புணர்ச்சி நிகழுமெனினும், பிரிவு நிகழ்ந்தவா றென்னையெனின்.
‘‘இடைச்சுர மருங்கி னவடம ரெய்திக் கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்கஞ ரெய்தி’’
(தொல். பொருள். 41)
என மேலே கூறுவாராதலின்
தலைவிதந்தையுந் தன்னையருந் தேடிப் பின் வந்து இவ்வொழுக்கத்திற்கு இடையூறு செய்வரென்னுங் கருத்தே இருவருள்ளத்தும் பெரும்பா
|