ளி வீதியைப் போல நன்றுஞ் செலவயர்ந் திசினால் யானே பலபுலந் துண்ணா வுயக்கமோ டுயிர்செலச் சாஅய்த் தோளுந் தொல்கவின் றொலைய நாளும் பிரிந்தோர் பெயர்வுக் கிரங்கி மருந்துபிறி தின்மையின் இருந்தும்வினை யிலனே’’
(அகம்.147)
இதனுள் வெள்ளிவீதியைப்
போலச் செல்லத் துணிந்த யான் பலவற்றிற்கும் புலந்திருந்து பிரிந்தோரிடத்தினின்றும்
பிரிந்த பெயர்வுக்குத் தோணலந் தொலைய உயிர்செலச் சாஅய் இரங்கிப் பிறிது மருந்தின்மையிற் செயலற்றேனென மிகவும் இரங்கியவாறு மெய்ப்பாடுபற்றியுணர்க. இஃதும் அகம்.
‘‘வானமூர்ந்த’’ (11) என்னும் அகப்பாட்டினுள் (அகம்.11)
‘‘மெய்புகு வன்ன கைகவர் முயக்க மவரும் பெறுகுவர் மன்னே’’
எனக் கூறி, அழுதன்
மேவாவாய்க் கண்ணுந் துயிலுமென இரக்கம்மீக் மீக்கூறியவாறு முணர்க.
‘‘குன்றியன்ன’’ (133) என்னும் அகப்பாட்டும் (133) அது. இவை பாலைக்கண் இரங்கல் நிகழ்ந்தன.
இங்ஙனம்
இச்சூத்திரவிதி உண்மையிற் சான்றோர்
அகத்தினுங் கலியினும் ஐங்குறுநூற்றினும் பாலைக்கண்ணே உடன்போக்கு நிகழ்ந்த செய்யுட்களைக் கோத்தாரென் றுணர்க.
இல்லிருந்து
செந்தீயோம்பல் வேளாளர்க்கு இன்மையிற் ‘கொண்டு தலைக்கழிதல்’ அவர்க்கு உரியதாயிற்று. ஒழிந்த மூன்று வருணத்தோருந் தமக்கு உரிய பிரிவின்கட் செந்தீ யோம்புவாரை நாட்டிப் பிரிப; ஆகலான், அவர்க்கு ஏனைப் பிரிவுகள் அமைந்தன. இதனைக்
‘‘கொடுப்போ ரின்றியுங் கரண முண்டே’’ (143)
எனக் கற்பியலிற் கரணம் வேறாகக்
கூறுமாறு ஆண்டுணர்க.
‘‘வேர்முழுதுலறி நின்ற’’ (145)
என்னும் மணிமிடைபவளத்துட்
‘‘கூழுடைத் தந்தையிடனுடை வரைப்பி’’,
னூழடி யொதுங்கினு
முயக்கும் ‘‘எனவுங்’’ ‘‘கிளியும் பந்தும்’’ (49) என்னும்
|