க்கு நிலம்
பற்றாது காலம்பற்றிக்
கருப்பொருள் வருங்காற் றம்மியல்பு திரிய வருவனவும் வருமென்று கொள்க. ‘எந்நில மருங்கிற் பூ’ (19) என்பதனாற் பூவும் புள்ளும் வரைவின்றி மயங்குமெனவே ஒழிந்த கருவும் மயங்குமென்பது ‘சூத்திரத்துட் பொருளன்றியும்’
(659) என்பதனான் உரையிற் கொள்க. அது ‘‘அயந்திகழ் நறுங்கொன்றை’’ (150) என்னும் நெய்தற்கலியுட் காண்க.
முல்லைக்கு
உணா, வரகுஞ் சாமையும் முதிரையும்; மா, உழையும் புல்வாயும் முயலும்; மரம், கொன்றையுங் குருந்தும்; புள், கானக்கோழியுஞ் சிவலும்; பறை, ஏறுகோட்பறை; செய்தி, நிரை மேய்த்தலும் வரகு முதலியன களை கட்டலும் கடாவிடுதலும்; யாழ், முல்லையாழ். பிறவுமென்றதனான், பூ, முல்லையும் பிடவுந் தளவுந் தோன்றியும்; நீர் கான்யாறு; ஊர், பாடியுஞ் சேரியும் பள்ளியும்.
குறிஞ்சிக்கு
உணா, ஐவனநெல்லுந் தினையும் மூங்கிலரிசியும்; மா, புலியும் யானையுங் கரடியும் பன்றியும்; மரம், அகிலும் ஆரமுந் தேக்குந் திமிசும் வேங்கையும்; புள், கிளியும் மயிலும்; பறை முருகிய முந் தொண்டகப்பறையும்; செய்தி, தேன் அழித்தலுங் கிழங்கு அகழ்தலுந் தினைமுதலியன விளைத்தலுங் கிளிகடிதலும்; யாழ். குறிஞ்சி யாழ். பிறவுமென்றதனான், பூ காந்தளும் வேங்கையுஞ் சுனைக்கு வளையும்; நீர், அருவியுஞ் சுனையும்; ஊர், சிறுகுடியுங் குறிச்சியும்.
மருதத்திற்கு உணா, செந்நெல்லும் வெண்ணெல்லும்;
மா, எருமையும் நீர் நாயும்; மரம், வஞ்சியுங் காஞ்சியும்
மருதமும்; புள், தாராவும் நீர்க்கோழியும்; பறை, மணமுழவும்
நெல்லரிகிணையும்; செய்தி, நடுதலுங் களைகட்டலும் அரிதலுங் கடாவிடுதலும்; யாழ், மருதயாழ். பிறவுமென்றதனான், பூ, தாமரையுங் கழுநீரும்; நீர், யாற்று நீரும் மனைக்கி
|