ணறும் பொய்கையும்; ஊர், உர்க ளென்பனவேயாம்.
நெய்தற்கு உணா, மீன்விலையும் உப்புவிலையும்; மா, உமண் பகடு போல்வன; முதலையுஞ் சுறாவும் மீனாதலின் மாவென்றல் மரபன்று; மரம், புன்னையும்
ஞாழலுங் கண்டலும்; புள் அன்னமும் அன்றிலும் முதலியன; பறை, மீன் கோட்பறை; செய்தி, மீன்படுத்தலும் உப்பு விளைத்தலும் அவை விற்றலும்; யாழ் நெய்தல்யாழ். பிறவு மென்றதனான், பூ கைதையும் நெய்தலும்; நீர், மணற்கிணறும் உவர்க்குழியும்; ஊர், பட்டினமும் பாக்கமும்.
இனிப்
பாலைக்கு உணா, ஆறலைத்தனவுஞ் சூறைகொண்டனவும்; மா வலியழிந்த யானையும் புலியுஞ் செந்நாயும்; மரம், வற்றின இருப்பையும் ஓமையும் உழிஞையும் ஞெமையும்; புள், கழுகும் பருந்தும் புறாவும்; பறை, சூறைகோட்பறையும் நிரை கோட்பறையும்; செய்தி,
ஆறலைத்தலுஞ் சூறைகோடலும்; யாழ், பாலையாழ். பிறவு மென்றதனான்;
பூ, மராவுங் குராவும் பாதிரியும்; நீர், அறுநீர்க்கூவலுஞ்சுனையும்; ஊர், பறந்தலை.
இன்னும் ‘பிறவு’
மென்றதனானே இக் கூறியவற்றிற்குரிய மக்கள் பெயருந் தலைமக்கள் பெயருங் கொள்க. ‘அவை பெயரும் வினையும்’ (20) என்னுஞ் சூத்திரத்துட் காட்டுதும். பிறவு மென்றதனாற் கொள்வன, சிறுபான்மை திரிவுபடுதலிற், பிறவு மென்று அடக்கினார்.
ஒருநிலக் கருப்பொருள் ஒழிந்த நிலத்து மயங்குதல்
|