நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4929
Zoom In NormalZoom Out


இக்   காட்டிய   இருவகையினும்  பெயர்ப்பெயரும் வினைப்பெயரும்
பாடலுட் பயின்ற வகையாற் பொருணோக்கியுணர்க.

ஈண்டுக்     கூறிய  திணைநிலைப்பெயரை ‘ஏவன்  மரபின்’ (24)
என்னுஞ்  சூத்திரத்து  அறுவகையரெனப்  பகுக்குமாறு ஆண்டுணர்க.
                                                     (20)

திணைதொறுமரீஇய பெயரினருள்ளும் தலைமக்களாய்
வழங்குவாரும் உண்மை
 

21. ஆயர்வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர்
ஆவயின் வரூஉங் கிழவரும் உளரே.
 

இது     முன்னர்த்  திணைதொறு  மரீஇய  பெயருடையோரினுந்
திணைநிலைப்பெயராகிய   தலைமக்களாய்  வழங்குவாரும்  உளரென
முல்லைக்குங் குறிஞ்சிக்கும் எய்தாததெய்துவித்தது.

(இ-ள்)  ஆடூஉத்  திணைப்பெயர் - முற்கூறிய ஆண்மக்களாகிய
திணைதொறும்  மரீஇய  பெயர்களுள்;  ஆயர்  வேட்டுவர்  வரூஉங்
கிழவரும்  உளர் - ஆயரினும் வேட்டுவரினும் வருங் கிழவரும் உளர்,
ஆவயின்   (வரூஉங்   கிழவியரும்  உளர்)  -  அவ்விடத்து  வருந்
தலைவியரும் உளர் எ-று.

ஆயர் வேட்டுவரென்னும் இரண்டு பெயரே எடுத்தோதினாரேனும்
ஒன்றென  முடித்தலான்  அந்நிலங்கட்கு உரிய ஏனைப் பெயர்களான்
வருவனவுங் கொள்க.

‘‘தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாந்
தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த
பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசை இப் பாங்கரு
முல்லையுந் தாய பாட்டங்காற் றோழிநம்
புல்லினத் தாயர் மகளிரோ டெல்லா
மொருங்கு விளையாட வவ்வழி வந்த
குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன் மற்றென்னை
முற்றிழை யேஎர் மடநல்லாய் நீயாடுஞ்
சிற்றில் புனைகோ சிறிதென்றா னெல்லாநீ
பெற்றேம்யா மென்று பிறர்செய்த வில்லிருப்பாய்
கற்ற திலைமன்ற காணென்றேன் முற்றிழாய்
தாதுசூழ் கூந்த றகை