பெறத் தைஇய கோதை புனைகோ நினக்கென்றா னெல்லாநீ யேதிலார் தந்தபூக் கொள்வாய் நனிமிகப் பேதையை மன்ற பெரிதென்றேன் மாதரா யைய பிதிர்ந்த சுணங்கணி மென்முலைமேற் றொய்யி லெழுதுகோ மற்றென்றான் யாம்பிறர் செய்புற நோக்கி யிருத்துமோ நீ பெரிது மையலை மாதோ விடுகென்றேன் றையலாய் சொல்லிய வாறெல்லா மாறுமா றியான்பெயர்ப்ப வல்லாந்தான் போலப் பெயர்ந்தா னவனைநீ யாயர் மகளி ரியல்புரைத் தெந்தையும் யாயு மறிய வுரைத்தீயின் யானுற்ற நோயுங் களைகுவை மன்.’’
(கலி.111)
‘‘ஆயர் மகனையுங் காதலை கைம்மிக ஞாயையு மஞ்சுதி யாயி னரிதரோ நீயுற்ற நோய்க்கு மருந்து.’’
(கலி.107)
‘‘தோழிநாங் காணாமை யுண்ட கடுங்கள்ளை மெய்கூர நாணாது சென்று நடுங்க வுரைத்தாங்குக் கரந்ததூஉங் கையொடு கோட்பட்டாம் கண்டாய்நம் புல்லினத் தாயர் மகன்.’’
(கலி.115)
என்றாற் போல்வன பிறவும் வருவன கொள்க.
இன்னும் ‘‘ஏனலு மிறங்குகதி ரிறுத்தன’’ (132) என்னும் அகப்பாட்டினுள்
‘‘வானிணப் புகவிற் கானவர் தங்கை’’
எனவும், ‘‘மெய்யிற்றீரா’’
(28) என்பதனுள் ‘‘வேட்டுவற்
பெறலோ
டமைந்தனை’’ எனவும் வருவனவும் பிறவுங் கொள்க.
வேட்டு
என்னுந் தொழிலுடையானை
வேட்டுவனென்றலிங் குறிப்பு
வினைப்பெயர்.
‘‘குன்றக் குறவன் காதன் மடமகள் வண்டுபடு கூந்தற் றண்டழைக் கொடிச்சி வளையண் முளைவா ளெயிற்ற ளிளைய ளாயினு மாரணங் கினளே.’’
(ஐங்குறு.256)
இது வருத்தும்
பருவத்தளல்லள் என்ற தோழிக்குக் கூறியது. இப்பத்தினுட்
‘‘குறவன் மகள்’’ எனக் கூறுவன பல பாட்டுக்கள் உள; அவையுங் கொள்க. இவ்வாற்றான் இந்நிலத்து மக்கள் பெயரும் பெற்றாம். ஏனைய பெயர்களில் வந்தன வுளவேற் கொள்க.
(21)
ஏனைய திணைதொறுமரீஇய பெயரினருள்ளும் தலைமக்களாய் வழங்குவாரும் உண்மை
|