நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4939
Zoom In NormalZoom Out


றுள்   -  அம்மூன்றனுள்;  ஓதலும்  தூதும்  உயர்ந்தோர்  மேன  -
ஓதற்பிரிவுந் தூதிற்பிரிவும் அந்தணர் முதலிய மூவரிடத்தன எ-று.

எனவே, ஒழிந்த  பகைவயிற் பிரிவு அரசர்க்கே உரித்தென மேலே
கூறுப. உயர்ந்தோரெனக் கூறலின் வேளாளரை ஒழித்தாரென்றுணர்க.

உ-ம்:

‘‘அரம்போ ழவ்வளை தோணிலை ஞெகிழ
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
ஈர்ங்கா ழன்ன அரும்புமுதி ரீங்கை
ஆலி யன்ன வால்வீ தாஅய்
வைவா லோதி மையணல் ஏய்ப்பத்
தாதுறு குவளைப் போதுபிணி யவிழப்
படாஅப் பைங்கட் பாவடிக் கயவாய்க்
கடாஅம் மாறிய யானை போலப்
பெய்துவறி தாகிய பிறங்குசெலற் கொண்மூ
மைதோய் விசும்பின் மாதிரத் துழிதரப்
பனியடூஉ நின்ற பானாட் கங்குல்
தமியோர் மதுகை தூக்காய் தண்ணென
முனிய அலைத்தி முரணில் காலைக்
கைதொழு மரபிற் கடவுள் சான்ற
செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின்
விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்
வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலை செல்லார்
சூடா வாகைப் பறந்தலை ஆடுபெற
ஒன்பது குடையும் நன்பக லொழித்த
பீடில் மன்னர் போல
ஓடுவை மன்னால் வாடைநீ யெமக்கே.’’      (அகம்.125)

இதனுட்     பலருங்    கைதொழும்    மரபினையுடைய    கட
வுட்டன்மையமைந்த     செய்வினையெனவே     ஓதற்பிரிதலென்பது
பெற்றாம். ‘‘சிறந்தது பயிற்ற லிறந்ததன் பயனே’’ (192) என்பதனாற்
கிழவனும்    கிழத்தியும்    இல்லறத்திற்   சிறந்தது   பயிற்றாக்கால்
இறந்ததனாற்  பயனின்றாதலின்,  இல்லறம் நிரம்பாதென்றற்கு ‘நிரம்பா
வாழ்க்கை’  யென்றார்.  இல்லறம்  நிகழ்கின்ற  காலத்தே  மேல்வருந்
துறவறம்  நிகழ்த்துதற்காக  அவற்றைக்  கூறும்  நூல்களையும்  கற்று
அவற்றின்   பின்னர்த்   தத்துவங்களையுமுணர்ந்து   மெய்யுணர்தல்
அந்தணர்  முதலய  மூவர்க்கும்  வேண்டுதலின் ஓதற்பிரிவு அந்தணர்
முதலியோர்க்கே சிறந்ததென்றார்.

‘‘பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ
மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதோ.’’   (கலி.15)

என்பதும்      அது;   மையற்ற   படிவம்  அந்தணர்  முதலியோர்
கண்ணதாகலின். ‘‘விருந்தின்மன்னர்’’ (54)  என்னும்  அகப்பாட்டில்
வேந்தன்   பகைமையைத்  தான்  தணிவித்தமை கூறலின் அந்தணன்
தூதிற்   பிரிந்தமை   பெற்றாம்.  ‘‘வயலைக்  கொடியின்  வாடிய
மருங்குல்’’
  (புறம்.305)  என்னும்  புறப்பாட்டில்  அந்தணன்   தூது
சென்றவாறுணர்க. அரசன்   தூதுசேறல்  பாரதத்து வாசுதேவன் தூது
சென்றவாற்றா னணர்க.

அது.

‘‘படர்ந்தாரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே.’’
                                
(சிலப்.ஆய்ச்சி.)

என்பதனானுணர்க. வணிக சென்ற தூது வந்துழிக் காண்க.       (26)

பகைவயிற் பிரிவு அரசர்க்கே உரித்தெனல்
 

27. தானே சேறலும் தன்னொடு சிவணிய
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே.
 

இது பகைவயிற் பிரிவு. அரசர்க்கே உரித்தென்கின்றது

(இ-ள்.)     தானே சேறலும் - தன்பகைக்குந் தானே செல்லுதலும்;
தன்னொடு  சிவணிய  ஏனோர் சேறலும் - அவனொடு நட்புக்கொண்ட
ஒழிந்தோர்  அவற்குத்  துணையாகிச்  செல்லுதலுமாகிய இருபகுதியும்;
வேந்தன் மேற்று. அரசன்கண்ண எ-று.

எனவே,    வணிகர்க்கு உரித்தன்றாயிற்று. தானேயென்று ஒருமை
கூறிய  அதனானே முடியுடைவேந்தர்  தாமே சேறலும் ஏனோரெனப்
பன்மைகூறிய    அதனானே   பெரும்பான்மையுங்   குறுநிலமன்னர்
அவர்க்காகச்  சேறலும்,  முடியுடைவேந்தர் அவர்க்காகச் சிறுபான்மை
சேறலும்  உணர்க..  முடியுடைவேந்தர்  உள்வழிக்  குறுநில  மன்னர்
தாமே செல்லாமையுணர்க. இதனை ‘‘வேந்தர்க்குற்றுழி’’ (இறை. கள.
38)யென்ப   ஏனையார்.  அவ்வேந்தர்  இல்வழிக்  குறுநிலமன்னருந்
தாமே  சேறல்  ‘‘வேந்துவினை யியற்கை’’ (32) என்பதன்கட் கூறுப.
இதனானே   தன்பகைமேலும்   பிறர்பகை   மேலும்   ஒருகாலத்திற்
சேறலின்றென்றார்.

‘‘கடும்புனல் கால்பட்டு’’ என்னும் பாலைக்கலியுள்,

‘‘மயங்கமர் மாறட்டு மண்வௌவி வருபவர்
தயங்கிய களிற்றின்மேற் றகைகாண விடுவதோ.’’ (கலி.31)

எனவும்,

‘‘பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர்’’
                                        (கலி.31)

எனவும்   மண்கோடலுந்   திறைகேடாலும்   அரசர்க்கே உரித்தாகக்
கூறியது.

‘‘நீளுயர் கூட னெடுங்கொடி யெழவே.’’         (கலி.31)

எனச் சுரிதகத்துக் கூறியவாற்றா னுணர்க.

‘‘பொருபெரு வேந்தர்க்குப் போர்ப்புணை யாகி
யொருபெருங் காதலர் சென்றார் - வருவது
காணிய வம்மோ கனங்குழை கண்ணோக்கா
னீணகர் முன்றின்மே னின்று.’’

இது வேந்தர்க்குற்றுழி வேந்தன் பிரிந்தது.

‘‘கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
வெண்கோட் டியானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல்வாய் தன்னநின்
பிழையா நன்மொழி தேறிய விவட்கே’’         (நற்.10)

இது குறுநிலமன்னர்   போல்வார்  சென்றமை தோன்றக் கூறியது.
‘‘மலைமிசைக் குலைஇய’’ (அகம்.84) என்பதும் அது.

இனி   வேட்கைமேற் சேறலும் நாடுகாணச் சேறன் முதலி யனவும்
பாலையாகப்  புலனெறி வழக்கஞ் செய்யாமை உணர்க. வேந்தனென்று
ஒருமையாற்   கூறினார். ‘‘மெய்ந்நிலை   மயக்கி னாஅ  குநவும்’’
(சொல்.449)  என்னும் விதிபற்றி ‘சிவணிய’ வென்பதனை வினையெச்ச
மாக்கி நட்பாடல் வேண்டியென்றுமாம்.                       (27)

ஏனைப்பிரிவு இவையெனல்
 

28. மேவிய சிறப்பி னேனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையாற்
பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும்
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே.
 

இது     முறையானே தன் பகைமேற்சென்ற அரசன் திறை பெற்ற
நாடுகாத்து  அதன்கண் தன்னெறிமுறை அடிப்படுத்துதற்குப் பிரிதலும்
ஏனை வணிகர் பொருட்குப் பிரிதலுங் கூறுகின்றது.

(இ-ள்.)  முல்லை முதலாச் சொல்லிய மேவிய சிறப்பின் - தானே
சென்ற வேந்தன் தன