நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4941
Zoom In NormalZoom Out


யாறின்றிப் பொருள்வெஃகி யகன்றநாட் டுறைபவர்;
எனநீ,

தெருமரல் வாழி தோழிநங் காதலர்
பொருமுரண் யானையர் போர்மலைந் தெழுந்தவர்
செருமேம் பட்ட வென்றியர்
வருமென வந்தன்றவர் வாய்மொழித் தூதே.’’    (கலி.26)

இதனுள்  ‘ஒல்குபு நிழல்சேர்ந்தார்க்கு’ எனவே, முன்னர் ஆள்பவர்
கலக்குறுத்த     அலைபெற்றுப்     பின்     தன்னை    நிழலாகச்
சேர்ந்தாரென்பதூஉம் அவர்க்குப் பின்னர் உலைவு பிறவாமற் பேணிக்
காத்தானென்பதூஉம்,  ‘விருந்துநாட்டு’ என்பதனான் திறைபெற்ற புதிய
நாடென்பதூஉம் பெற்றாம். ஏனையவற்றிற்கும் இவ்வாறே கூறிக்கொள்க.

ஏதினாடு - புதிய நாடு. ஆறின்றிப் பகைவர் பொருளை விரும்பின
நாட்டென்றும்   அவரை   யகன்ற  நாட்டென்றும்  பொருள்  கூறுக.
செருவின்   மேம்பட்ட   என்றது,   நாடுகளை.   அதனாற்   பெற்ற
வென்றியெனவே, நாடு திறைபெற்றமை கூறிற்று.

‘‘படைபண்ணிப்     புனையவும்’’ (17) என்னும் பாலைக்கலியுள்
‘‘வல்வினை   வயக்குதல்   வலித்திமன்’’   என்பதற்கு,   வலிய
போர்செய்து     அப்பகைவர்    தந்த    நாட்டை    விளக்குதற்கு
வலித்தியெனவுந்,     ‘‘தோற்றஞ்சாறொகுபொருள்’’   என்பதற்குத்
தோற்றம் அமைந்த திரண்ட   பொருளாவன அந் நாடுகாத்துப் பெற்ற
அறம் பொருளின்பம் எனவும், ‘‘பகையறு  பயவினை’’  என்பதற்குப்
பகையறுதற்குக்    காரணமாகிய    நாடாகிய    பயனைத்    தரும்
வினையெனவும்,  ‘‘வேட்டபொருள்’’   என்பதற்கு   அறம்பொருள்
இன்பம் எனவும் பொருளுரைத்துக் கொள்க.

பிறவும் இவ்வாறு வருவன உய்த்துணர்ந்து பொ