நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4942
Zoom In NormalZoom Out


ருள் கூறுக.

இனிக்,

‘‘கேள்கே டூன்றவுங் கிளைஞ ராரவுங்
கேளல் கேளிர் கெழீஇயின ரொழுகவு
மாள்வினைக் கெதிரிய வூக்கமொடு புகல்சிறந்து.’’ 
                                     
(அகம்.93)

என வாணிகர் பொருள்வயிற் பிரிந்தவா றுணர்க.

‘‘நட்டோ ராக்கம் வேண்டியு மொட்டிய
நின்றோ ளணிபெற வரற்கு
மன்றோ தோழியவர் சென்ற திறமே.’’         (நற்.286)

என்பதனுள் அணியென்றது பூணினை.

பிறவும் இவ்வாறு வருவன உயத்துணர்ந்து கொள்க.         (28)

பொருட்பிரிவு நால்வர்க்கு முரித்தாதல்
 

29. மேலோர் முறைமை நால்வர்க்கு முரித்தே.
 

இஃது எய்தாத தெய்துவித்தது.

(இ-ள்.)  மேலோர்  முறைமை  -  மேல்  அதிகாரப்பட்டு  நின்ற
வாணிகர்க்கு  ஓதிய  அறந்தலைப்  பிரியாப்  பொருள்  செயல்வகை;
நால்வர்க்கும்   உரித்து   -  அந்தணர்க்கும்  அரசர்க்கும்  இருவகை
வேளாளர்க்கும் உரித்து எ-று.

இதற்கு   வணிகர்க்கு வேதநூலுள் இழைத்த பொருண் முடிவானே
இந்நால்வரும்   பொருண்முடிப்பரெனிற்   பிரிவொன்றாகி   மயங்கக்
கூறலென்னும்  குற்றம் தங்குமாகலின் அது கருத்தன்று; இந்நால்வருள்,
அந்தணர்  ஓதலுங்  தூதும்  பற்றிப்  பொருண்  முடித்தலும்,  அரசர்
பகைவயிற்  பிரிவு  பற்றிப்  பொருண்முடித்தலும், உயர்ந்த வேளாளர்
பகைவயிற்    பிரிவு   பற்றிப்   பொருண்முடித்தலும்   உழுதண்பார்
வாணிகத்தாற் பொருண்முடித்தலுங் கருத்து.

இவற்றுள் வேள்விக்குப் பிரிந்து சடங்கிற்கு உறுப்பாகியும் அதற்குக்
குரவனாகியும்   நிற்றல்   உரிமையின்  ஆண்டு  வேள்வி  செய்தான்
கொடுத்த   பொருள்கோடல்  வேண்டுதலானும்  அறங்கருதித்  தூதிற்
பிரியினும்  அவர்  செய்த பூசனை கோடல்வேண்டுமாகலானும் அவை
அந்தணர்க்குப்  பொருள்  வருவாயாயின. வேள்விக்குப் பிரிதல் ஓதற்
பிரிவின் பகுதியா