யிற்று.
உ-ம்:
‘‘நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்துந்தா மஞ்சிய தாங்கே யணங்காகு மென்னுஞ்சொ லின்றீங் கிளவியாய் வாய்மன்ற நின்கேள் புதுவது பன்னாளும் பாராட்ட யானு மிதுவொன்றுடைத்தென வெண்ணி யதுதேற மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுட் பாயல்கொண் டென்றோட் கனவுவா ராய்கோற் றொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ விடுமருப் பியானை யிலங்குதேர்க் கோடு நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்றெம் செய்பொருண் முற்று மளவென்றா ராயிழாய் தாமிடை கொண்டததுவாயிற் றம்மின்றி யாமுயிர் வாழு மதுகை யிலமாயிற் றொய்யி றுறந்தா ரவரெனத் தம்வயி னொய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு போயின்று கொல்லெ னுயிர்.’’
(கலி.24)
இதனுள் ‘நடுநின்’ றென்றதனான் இரு பெரு வேந்தரையுஞ் சந்து செய்வித்தற்கு யான் நடுவே நிற்பலென்றும், ‘‘எஞ் செய்பொருள் முற்றுமள’ வென்றதனான் அது முடித்தபின்னர் யாம் பெறுதற் குரியவாய் அவர் செய்யும் பூசனையாகிய பொருண் முடியு மளவுமென்றும், அந்தணன் பொருள்வயிற் பிரியக் கருதிக் கூறிய கூற்றினை அவன் தலைவி கூறியவாறுணர்க. இதனுட் ‘கடிமனைகாத்’ தென்றதனை இல்லறமாகவும், ‘ஓம்ப’ வென்றதனைச் செந்தீயோம்ப வென்றுங் கொள்க.
‘‘நன்கலங் களிற்றொடு நண்ணா ரேந்தி வந்துதிறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து’’
(அகம்.124)
என்புழி, நன்கலந் திறைகொடுத்தோ ரென்றலிற் பகைவயிற் பிரிவே பொருள்வருவாயாயிற்று. ஒழிந்தனவும் இவ்வாறே உய்த்துணர்க.
மேலோர் முறைமை
ஏனோர்க்கு முரித்தே என்னாது நால்வர்க்கு முரித்தே என்றது, முற்கூறிய வணிக
|