னவும்
‘‘ஆலஞ் சேரி மயிந்த.... னூருண் கேணிநீ ரொப்போன்’’ எனவுஞ் சான்றோர்
செய்யுட்செய்தார். உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி அழுந்தூர்வேளிடை மகட்கோடலும் அவன் மகனாகிய கரிகாற் பெருவளத்தான் நாங்கூர்வேளிடை மகட் கோடலுங் கூறுவர்.
இதனானே,
‘‘பகடுபுறந் தருநர் பார மோம்பிக் குடிபுறந் தருகுவை யாயின்’’
(புறநா.35)
எனவும்,
‘‘ஞாலத்துக், கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக் குடிபுறந் தருநர் பாரமோம்பி’’
(பதிற்றுப்.13)
எனவுஞ் சான்றோர் கூறியவாறுணர்க.
உ-ம்:
‘‘வேந்தன் குறைமொழிந்து வேண்டத் தலைப்பிரிந்தார் தாந்தங் குறிப்பின ரல்லரா - லேந்திழாய் கண்பனி வாரக் கலங்கல் பிரிவரோ தண்பனிநாளே தனித்து’’
என
வரும். (30)
வேதத்தினாற் பிறந்த நூல்களும் நால்வகை வருணத்தார்க்கும் உரியவாதல்
|