நகர் கல்லெனக் கலங்கப் பூப்புரை யுண்கண் மடவரற் போக்கிய புணர்ந்த வறனில் பாலே’’
(ஐங்.376)
இது தீவினையை வெகுண்டு புலம்பியவாறு
காண்க. பால். பழவினை. இவை ஐங்குறுநூறு.
இனி அச்சம் இருவகைத்து; தலைவி ஆண்டை விலங்கும் புள்ளும் ஆறலைப்போரும் முதலிய கண்டு அஞ்சும் அச்சமுந், தந்தை
தன்னையர் பின்சென்றவர் இஃதறமென்னாது
தீங்கு செய்கின்றாரோ
என்று அஞ்சும் அச்சமுமென.
‘‘நினைத்தொறுங் கலுழு மிடும்பை யெய்துக புலிக்கோட் பிழைத்த கவைக்கோட்டு முதுகலை மான்பிணை யணைதர வாண்குரல் விளிக்கும் வெஞ்சுர மென்மக ளுய்த்த வம்பமை வல்வில் விடலை தாயே’’
(ஐங்.373)
இதுவும் ஐங்குறுநூறு.
‘‘கேளாய் வாழியோ மகளைநின் தோழி திருநகர் வரைப்பகம் புலம்ப அவனொடு பெருமலை இறந்தது நோவேன் நோவல் கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி முடங்குதாள் உதைத்த பொலங்கெழு பூழி பெரும்புலர் விடியல் விரிந்துவெயில் எறிப்பக் கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல் சிறுபுன் பெடையொடு குடையும் ஆங்கண் அஞ்சுவரத் தகுந கானம் நீந்திக் கன்றுகா ணாதுபுன் கண்ண செவிசாய்த்து மன்றுநிறை பைதல் கூரப் பலவுடன் கறவை தந்த கடுங்கான் மறவர் கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை மடமயி லன்னஎன் நடைமெலிபேதை தோள் துணை யாகத் துயிற்றத் துஞ்சாள் வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண் சேக்கோள் அறையுந் தண்ணுமை கேட்குநள் கொல்லெனக் கலுழுமென் னெஞ்சே’’
(அகம்.63)
இவை அச்சங் கூறின.
தந்தை
தன்னையர் சென்றாரென்று சான்றோர் செய்யுட் செய்திலர், அது
|