நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4951
Zoom In NormalZoom Out


புலனெறிவழக்கம் அன்மையின்.

இனிச் சார்தலும்  இருவகைத்து,  தலைவி சென்று சாரும் இடனும்,
மீண்டு வந்து சாரும் இடனுமென.

உ-ம்:

‘‘எம்வெங் காமம் இயைவ தாயின்
மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர்
கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த
பாக லார்கைப் பறைக்கட் பீலித்
தோகைக் காவின் துளுநாட் டன்ன
வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பிற்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்
அறிந்த மாக்கட் டாகுக தில்ல
தோழி மாரும் யானும் புலம்பச்
சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன்
பாழி யன்ன கடியுடை வியன்நகர்ச்
செறிந்த காப்பிகந் தவனொடு போகி
அத்தஇருப்பை ஆர்கழல் புதுப்பூத்
துய்த்த வாய துகள்நிலம் பரக்கக்
கொன்றை யஞ்சினைக் குழற்பழங் கொழுதி
வன்கை யெண்கின் வயநிரை பரக்கும்
இன்றுணைப் பிரிந்த கொள்கையோ டொராங்குக்
குன்ற வேயில் திரண்டஎன்
மென்றோள் அஞ்ஞை சென்ற ஆறே’’       (அகம்.15)

‘‘அருஞ்சுரம் இறந்தவென் பெருந்தோட்குறுமகள்
திருந்துவேல்