நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4955
Zoom In NormalZoom Out


ங்குறுநூறு     தலைவன்   மீண்டு  தலைவியைத்  தன்   மனைக்கட்
கொண்டுவந்துழி அவன்தாய் சிலம்புகழீஇ நோன்பு  செய்கின்றாளெனக்
கேட்ட நற்றாய் ஆண்டுநின்றும் வந்தார்க்குக் கூறியது.

இன்னுஞ்  சான்றோர்  செய்யுள்களுள் வேறுபட வருவனவெல்லாம்
இதனான் அமைக்க.

சேரியுஞ் சுரத்தும் தேடிச் செல்லும் தாயரும் உண்மை
 

37. ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்துந்
தாமே செல்லுந் தாயரும் உளரே.
 

இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி.

(இ-ள்.)  ஏமப்  பேர்ஊர்ச்  சேரியும் சுரத்தும். பதியெழு வறியாப்
பேரூரிற்  றெருவின்கண்ணும்  அருவழிக்கண்ணும்;  தாமே  செல்லும்
தாயரும்   உளர்.   தந்தையுந்   தன்னையரும்   உணரா   முன்னம்
எதிர்ப்பட்டு மீட்டற்குத் தாமே போகுந் தாயரும் உளர் எ-று.

உம்மை  எண்ணும்மை.  தாயரெனப் பன்மை கூறித் தாமே யெனப்
பிரித்தனாற்  சேரிக்கு  நற்றாய்  சேறலுஞ்,  சுரத்திற்குச் செவிலித்தாய்
சேறலும் புலனெறி வழக்கிற்குச் சிறந்தவென்றுணர்க.

உ-ம்:

‘‘வெம்மலை யருஞ்சுர நம்மிவ ணொழிய
விருநில முயிர்க்கு மின்னாக் கானம்
நெருநற் போகிய பெருமடத் தகுவி
யைதக லல்குற் றழையணிக் கூட்டுங்
கூழை நொச்சிக் கீழ தென்மகள்
செம்புடைச் சிறுவிரல் வரித்த
வண்டலுங் காணிரோ கண்ணுடை யீரே’’     (அகம்.275)

வண்டலைக்     காணார்  தேஎத்து  நின்று காணில் ஆற்றீரெனக்
கூறினமையின்   ஆயத்திற்கன்றி   இற்புறஞ்  சென்று  சேரியோர்க்கு
உரைத்ததாயிற்று.

‘‘நிலந்தொட்டுப் புகாஅர் வான மேறார்
பிறங்கிரு முந்நீர்க் காலிற் செல்லார்
நாட்டி னாட்டி னூரி னூரிற்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரு முளரோநங் காத லோரே’’         (குறுந்.130)

இது     செவிலி தேடத் துணிந்தது. இக் குறுந்தொகையுள் நம்மாற்
காதலிக்கப்பட்டாரென்றது   அவ்  விருவரையும்.  தாயருமுளரென்றத
னாற்றந்தையும்  அன்னையரும்  வந்தால்  இன்னது செய்வலென்றலும்
உளவென்று கொள்க.

‘‘நுமர்வரி னோர்ப்பி னல்ல தமர்வரின்
முந்நீர் மண்டில முழுது மாற்றாது’’

என்றாற் போல்வன.