இதுவும் பாலைக்கு ஒரு வேறுபாடு கூறுகின்றது.
(இ-ள்.)
அயலோர் ஆயினும். முற்கூறிய சேரியினுஞ் சுரத்தினு மன்றித் தம் மனைக்கு அயலே பிரிந்தாராயினும்; அகற்சிமேற்று. அதுவும் பிரிவின்கண்ணதாம் எ-று.
எனவே
நற்றாய் தலைவியைத் தேர்ந்து இல்லிற்
கூறுவனவுஞ் சேரியிற் கூறுவனவும் பிரிந்தாரைப் பின் சென்றதேயாயிற்று. இக் கருத்தான் ‘ஏமப்பேரூர்’ என்றார். இதனானே மனையயற்கட் பரத்தையிற் பிரிவும் பாலையென்று உய்த்துணர்க.
(38)
உடன்போக்கின்கண் தோழி கூற்றுக்கள் நிகழுமாறு
|