இது, கொண்டுதலைக்கழிந்துழி
இடைச்சுரத்துக் கண்டோர் கூறுவன
கூறுகின்றது.
(இ-ள்.) பொழுதும்
ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம்
காட்டலும் - உடன்போயவழி மாலைக்காலமுஞ் சேறற்கரிய வழியும் அஞ்சுவரக் கூறி, அவற்றது தீங்கு காரணமாகப் போகின்றார்க்கு வரும் ஏதம் அறிவித்தலும்; ஊரது சார்வும் செல்லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவியும் - எம்மூர் அணித்தெனவும் நீர் செல்லுமூர் சேய்த்தெனவும் அன்புடை நெஞ்சத்தாற் கூறுங் கூற்றுக்களும்; புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமோடு அழிந்து எதிர் கூறி விடுப்பினும் - புணர்ந்து உடன்போய இருவர்கண்ணுந் தணவா நெஞ்சினராகி ஆற்றாமை மீதூர ஏற்றுக்கொண்டு நின்று இனி இதின் ஊங்குப் போதற்கரிது நும் பதிவயிற்பெயர்தல் வேண்டுமென்று உரைத்து
மீட்டலும்; ஆங்கு அத்தாய்நிலைகண்டு தடுப்பினும்
விடுப்பினும் - அவ்விடத்துத் தேடிச் சென்ற அச்செவிலியது நிலைகண்டு அவளைத்
தடுத்து மீட்பினும், அவர் இன்னுழிச் செல்வரென விடுத்துப்
போக்கினும்; சேய் நிலைக்கு அகன்றோர் செலவினும் - சேய்த்தாகிய நிலைமைக்
கண்ணே நீங்கின அவ்விருவருடைய போக்கிடத்தும்; வரவினும்
- செவிலியது வரவிடத்தும்; கண்டோர் மொழிதல் கண்டது என்ப
- இடைச்சுரத்துக் கண்டோர் கூறுதல் உலகியல் வழக்கினுட் காணப்பட்ட தென்று கூறுவர் புலவர்
எ-று.
‘‘எம்மூ ரல்ல தூர்நணித் தில்லை வெம்முரட் செல்வன் கதிரு மூழ்த்தனன் சேர்ந்தனை சென்மோ பூந்தார் மார்ப இளையள் மெல்லியல் மடந்தை அரிய சேய பெருங்க லாறே.’’
(சிற்றெட்டகம்)
இதனுட் கதிரும்
ஊழ்த்தனனெனவே பொழுதுசேறலும், பெருங்கலாறெனவே
ஆற்றதருமையும் பற்றிக் குற்றங் காட்டியவாறு காண்க.
‘‘எல்லுமெல்லின்று’’ என்னுங் குறுந்தொகைப் (390) பாட்டும் அது.
‘‘நல்லோண் மெல்லடி நடையு மாற்றாள் பல்கதிர்ச்
செல்வன் கதிரு மூழ்த்தனன் அணித்
|