தாத் தோன்றுவ தெம்மூர் மணித்தார் மார்ப சேந்தனை சென்மே.’’
(பொருளியல்)
இஃது எம்மூர்
அணித்தென்றதனாற் சார்வும், அதனானே செல்லுந்தேயஞ் சேய்த்தெனவுங் கூறிற்று. மகட்பயந்த வாழ்வோர்க்கு இவளைக் கண்டு அருள் வருதலின் ‘ஆர்வநெஞ்ச’
மென்றார்.
‘‘இதுநும் மூரே யாவருங் கேளிர் பொதுவறு சிறப்பின் வதுவையுங் காண்டும் மீன்றோ ரெய்தாச் செய்தவம் யாம்பெற் றனமால் மீண்டனை சென்மே.’’
இஃது அழிந்தெதிர்
கூறி விடுத்தது. இது ‘கொடுப்போரின்றிக் கரண முண்மை’ (141) கூறிற்று. மீட்டுழி
இன்னுழிச் சென்று இன்னது செய்ப என்றல் புலனெறி
வழக்கன்று.
‘‘பெயர்ந்து
போகுதி பெரூமூ தாட்டி சிலம்புகெழு சீறடி சிவப்ப விலங்குவேற் காளையோ டிறந்தனள் சுரனே.’’
‘‘சீர்கெழு
வெண்முத்த மணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினும்
நீர்க்கவைதா மென்செய்யுந் தேருங்கா னும்மக
ணுமக்குமாங் கனையளே.’’ (கலி.9)
‘‘கடன்மேய சங்கங் கழியடைந்த பெண்ணை மடன்மேய வாழ்குர லன்றில் -
கெடலருஞ்சீர் வாமா னெடுங்கோதை வான்றீண்டு
கொல்லிமேற் றேமாவின் மேய கனி.’’
இவை செவிலியைத் தடுத்தன.
‘‘சிலம்புஞ் சிறுநுதலுஞ் சில்குழலும் பல்வளையு மொருபாற்
றோன்ற அலங்கலந் திண்டோளும் ஆடெருத்தும்
ஒண்குழையு
மொருபாற் றோன்ற விலங்க லருஞ்சுரத்து வேறுருவின் ஓருடம்பாய் வருவார்க்
கண்டே அலங்கல் அவிர்சடையெம் அண்ணல்
விளையாட்டென்
றகன்றேம் பாவம்’’
இது தெய்வமென
யாங்கள் போந்தோம்,
நுமக்கெய்தச்
சேறலாமென்று விடுத்தது
‘‘நெருப்பவிர் கனலி யுருப்புச்சினந் தணியக் கருங்கால் யாத்த வரிநிழ லசைஇச் சிறுவரை யிறப்பிற் காண்டி செறிதளிர்ப் பொன்னேர் மேனி மடந்தையொடு வென்வே லண்ணல் முன்னிய சுரனே.’’
(ஐங்குறு.388)
இவ் வைங்குறுநூறும் அது.
‘‘அஞ்சுடர்நீள் வாண்முகத் தாயிழையு மாறிலா வெஞ்சுடர்நீள் வேலானும் போதரக்கண் - டஞ்சி யொருசுடரு மின்றி யுலகுபா ழாக விருசுடரும் போந்தனவென்றார்’’
(திணைமாலை71)
இஃது இடைச்சுரத்துக் கண்டோர் கூறிய வார்த்தையைக்
கேட்டோராகச் சிலர் கூறியது.
‘‘அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத் தொலிவ லீந்தி னுலவை யங்காட் டாறுசென் மாக்கள் சென்னி யெறிந்த செம்மறுத் தலைய நெய்த்தோர் வாய வல்லியம்
|