நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4962
Zoom In NormalZoom Out


பெருந்தலைக் குருளை மாலை
மானோக்கு மிண்டிவ ரீங்கைய சுரனே
வையெயிற் றையண் மடந்தை முன்னுற்
றெல்லிடை நீங்கு மிளையோ னுள்ளங்
காலொடு பட்ட மாரி
மால்வரை மிளிர்க்கு முருமினுங் கொடிதே.’’       (நற்.2)

‘‘காண்பா னவாவினாற் காதலன் காதலிபின் னடவாநிற்ப
நாண்பால ளாதலா னன்னுதல் கேள்வன்பின் னடவாநிற்ப
வாண்பான்மை குன்றா வயில்வே லவன்றனக்கு மஞ்சொ
                                       லாட்கும்

பாண்பால வண்டினமும் பாட வருஞ்சுரமும் பதிபோன்
                                       றன்றே.’’

‘‘மடக்கண் டகரக் கூந்தற் பணைத்தோள்
வார்ந்தவா லெயிற்றுச் சேர்த்துசெறி குறங்கிற்
பிணைய லந்தழை தைஇத் துணையிலள்
விழவுக்களம் பொலிய வந்துநின் றோளே
யெழுமினோ வெழுமினங் கொழுநர்க் காக்கம்
ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
பலருடன் கழித்த வொள்வாண் மலையன
தொருவேற் கோடி யாங்குநம்
பன்மைய தெவனோவிவ ணன்மைதலைப்
                              படினே.’’
   (நற்.170)

இஃது     இடைச்சுரத்துக்   குறும்பினுள்ளோர்  இவரைக்  கண்டு
கோள்இழைப்புற்றார்க்கு  அவர்பெண்டிர் கூறியது. இவை செலவின்கட்
கூறியன.

‘‘வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்
யார்கொ லளியர் தாமே யாரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயி லழுவ முன்னி யோரே’’            (குறுந்.7)

என்பதும் அது.

‘‘கடியான் கதிரெறிப்பக் கல்லளையில் வெம்பியவக்
                                 கலங்கற் சின்னீ
ரடியா னுலகளந்த வாழியா னாக்கிய வமிர்தென்
                                    றெண்ணிக்
கொடியான் கொடுப்பக் குடங்கையிடங் கொண்டிருந்து
                                குடித்துச் சென்ற
வடியேர் தடங்கணவ் வஞ்சிக்கொம் பீன்றாரிவ் வருவார்
                                      போலும்’’

‘‘நமரே யவரெனி னண்ணினீர் சொன்மி
னமர்வி லொராவவதி யாய்நின் - றமரோ
விளக்கி னனையாளைத் தான்கண்டாள் கண்டேன்
களக்கனி வண்ணனை யான்’’

‘‘அறம்புரி யருமறை நவின்ற நாவிற்
றிறம்புரி கொள்கை யந்தணிர் தொழுவலென்
றொண்டொடி வினவும் பேதையம் பெண்டே
கண்டனெ மம்ம சுரத்திடை யவளை
யின்றுணை யினிதுபா ராட்டக்
குன்றுயர் பிறங்கன் மலையிறந் தோளே’’   (ஐங்குறு.387)

இவை செவிலி வரவின்கட் கூறின.

‘‘எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ
லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும்’’

                                தொ. பொ. நச். (1) 9

‘‘நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர்
வெவ்விடைச் செலன்மாலை யொழுக்கத்தீ ரிவ்விடை
யென்மக ளொருத்தியும் பிறன்மக னொருவனுந்

தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சிய
ரன்னா ரிருவரைக் காணிரோ பெரும
காணே மல்லேங் கண்டனங் கடத்திடை
யாணெழி லண்ணலோ டருஞ்சுர முன்னிய
மாணிழை மடவர றாயிர்நீர் போறிர்;
பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதா மென்செய்யும்
நினையுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே;
சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென்செயுந்
தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே
ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யுஞ்
சூழுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே;
எனவாங்கு, இறந்த கற்பினாட் கெவ்வம் படரன்மின்
சிறந்தானை வழிபடீஇச் சென்றன
ளறந்தலை பிரியா வாறுமற் றதுவே’’           (கலி.9)

என்னும்    பாலைக்கலியும்     அது.   இக்கூறியவாறன்றி   இன்னும்
வேறுபட வருவனவெல்லாம் இச்சூத்திரத்தான் அமைக்க.         (40)

உடன்போக்கின்கண்ணும் பிறாண்டுந்
தலைவனுடைய கூற்றுக்கள்
 

41.ஒன்றாத் தமரினும் பருவத்துஞ் சுரத்தும்
ஒன்றிய தோழியொடு வலிப்பினும் விடுப்பினும்
இடைச்சுர மருங்கின் அவ