யிற்சென்று
கடுமா கொன்று ஏனையவற்றைக் காத்தலும் முதலியன.
ஆங்கோர் பக்கமும் -
அவன் காத்தற்குரிய பகுதிக்கண்ணே நிற்பார்
கூற்றிற் பிரியுமிடத்தும்;
அவர் தாபதர் முதலியோர் பலருமாம்.
பரத்தையின்
அகற்சியிற் பரிந்தோட் குறுகி இரத்தலும்
தெளித்தலும் என இருவகையோடு - பரத்தையிற் பிரிதற் காரணத்தாற் பரிபுலம்பெய்திய தலைவியை எய்தி இரத்தலும் இரந்தபின்னர் ஊடலுணர்த்தலும் என்ற இரு பகுதியோடே; உரைத்திற நாட்டம் கிழவோன் மேன - முற்கூறிய இடங்களிற் கூற்று நிகழுங் கூறுபாட்டை நிலைபெறுத்துதல் தலைமகனிடத்தனவாம்
எ-று.
உ-ம்:
‘‘ஆறுசெல் வருத்தவுஞ் சீறடி சிவப்பவுஞ் சினைநீங்கு தளிரின் வண்ணம் வாடவுந் தான்வர றுணிந்த விவளினு மிவளுடன் வேய்பயி லழுவ முவக்கும் பேதை நெஞ்சம் பெருந்தக வுடைத்தே’’
இது தோழியொடு
வலித்தது.
‘அப்பாற்பட்ட ஒருதிறத்தானும்’ என்றதனானே,
தலைவியிடத்துத்
தலைவன் கூறுவன பலவுங் கொள்க.
உ-ம்:
‘‘வாள்வரி வயமான் கோளுகிர் அன்ன செம்முகை யவிழ்ந்த முண்முதிர் முருக்கின் சிதரல் செம்மல் தாஅய் மதரெழின் மாணிழை மகளிர் பூணுடை முலையின் முகைபிணி அவிழ்ந்த கோங்கமோ டசைஇநனை அதிரல் பரந்த அந்தண பாதிரி உதிர்வீ அஞ்சினை தாஅய் எதிர்வீ மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம் அணங்குடை நகரின் மணந்த பூவின் நன்றே கானம் நயவரும் அம்ம கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பிற் பிடிமிடை களிற்றின் தோன்றுங் குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்தே’’
(அகம்.99)
இவ் வகப்பாட்டுத் தலைவியை மருட்டிக்
கூறியது.
‘‘உயர்கரைக் கானியாற் றவிரற லகன்றுறை வேனிற் பாதிரி விரைமலர் குவைஇத் தொடலை தைஇய மடவரல் மகளே கண்ணினுங் கதவநின் முலையே முலையினுங் கதவநின் றடமென் றோளே’’
(ஐங்குறு.361)
இவ் வைங்குறுநூறு
உடன்போயவழித் தலைவன்
புகழ்ச்சிக்கு
நாணித் தலைவி கண்புதைத்துழி அவன் கூறியது.
‘‘அழிவில முயலு மார்வ மாக்கள் வழிபடு தெய்வங் கட்கண் டாஅங் கலமரல் வருத்தந் தீர யாழநின் னலமென் பணைத்தோ ளெய்தின மாகலிற் பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி நிழல்
|