நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4971
Zoom In NormalZoom Out


த் தேற்றேம்யாந்
தேர்மயங்கி வந்த தெரிகோதை யந்நல்லார்
தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி
நீகூறும் பொய்ச்சூ ளணங்காயின் மற்றினி
யார்மேல் விளியுமோ கூறு.’’                 (கலி.88)

இதனுள் இரத்தலுந்  தெளித்தலும்   வந்தவாறு   காண்க.  பிறவும்
இவ்வாறு வருவன கொள்க.

உடன்போக்கின்கண் செவிலி முதலியோருங் கூற்று நிகழ்த்துதல்
 

42.எஞ்சி யோர்க்கும் எஞ்சுதல் இலவே.
 

இது முன்னர்க் கூற்றிற்கு     உரியரெனக்  கூறாதோர்க்குங்  கூற்று
விதித்தலின் எய்தாத தெய்துவித்தது.

(இ-ள்.)  எஞ்சியோர்க்கும் - முன்னர்க் கூறாது நின்ற செவிலிக்குந்
தலைவிக்கும்  ஆயத்தோர்க்கும்  அயலோர்க்கும்;  எஞ்சுதல் இலவே
-கூற்றொழித லில எ-று.

செவிலிக்குக் கூற்று நிகழுமாறு:-

‘‘கிளியும் பந்துங் கழங்கும் வெய்யோள்
அளியும் அன்புஞ் சாயலும் இயல்பும்
முன்னாள் போலாள் இறீஇயரென் உயிரெனக்
கொடுந்தொடைக் குழவியொடு வயின்மரத் தியாத்த
கடுங்கட் கறவையிற் சிறுபுற நோக்கிக்
குறுக வந்து குவவுநுதல் நீவி
மெல்லெனத் தழீஇயினே னாக என்மகள்
நன்னர் ஆகத் திடைமுலை வியர்ப்பப்
பல்கால் முயங்கினள் மன்னே அன்னோ
விறன்மிகு நெடுந்தகை பலபா ராட்டி
வறனிழல் அசைஇ வான்புலந்து வருந்திய
மடமான் அசாவினந் திரங்குமரல் சுவைக்குங்
காடுடன் கழிதல் அறியின் தந்தை
அல்குபத மிகுத்த கடியுடை வியனகர்ச்
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போலக்
கோதை யாயமோ டோரை தழீஇத்
தோடமை அரிச்சிலம் பொலிப்பஅவள்
ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே.’’       (அகம்.49)

இவ்  வகப்பாட்டு உடன்போன   தலைவியை  நினைந்து  செவிலி
மனையின்கண் மயங்கியது.

‘‘அத்த நீளிடை யவனொடு போகிய
முத்தேர் வெண்பன் முகிழ்நகை மடவர
றாய ரென்னும் பெயரே வல்லா
றெடுத்தேன் மன்ற யானே
கொடுத்தோர் மன்றவவ ளாயத் தோரே.’’
   (ஐங்குறு.380)

இவ் வைங்குறுநூறு    செவிலி    தெருட்டுவார்க்குக்    கூறியது.
முலைமுகஞ் செய்