நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4977
Zoom In NormalZoom Out


றன் கூறாடை யுடுப்பவரே ஆயினும்
மொன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை யரிதரோ
சென்ற விளமை தரற்கு.’’
                   (கலி.18)

இதனுள்    ‘உளநாள்’ என்றது, நளது சின்மை; ‘அரிதரோ சென்ற
இளமை  தரற்கு’  என்றது இளமையதருமை; ‘உள்ளந் துரப்ப’ என்றது
உள்ளத்தான்  உஞற்றுதலான்  தாளான்  பக்கம்; ‘சென்றோர் முகப்பப்
பொருளுங்  கிடவாது’ என்றது தகுதியது அமைதி, தத்தம்  நிலைமைக்
கேற்பப்  பொருள்செய்ய  வேண்டுதலின் அது பாணிக்கு  மென்றலின்;
‘ஒரோஒகை தம்முட் டழீஇ ஒரோஒகை, ஒன்றன்கூ றாடை உடுப்பவரே
யாயினும்’  என்றது  இன்மைய திளிவு; ‘வளமை விழைதக்க துண்டோ’
என்றது   உடைமைய  துயர்ச்சி;  பிரிந்துறை  சூழாதி  ஐய’  என்றது
அன்பினதகலம்,            ‘பிரிந்துறைந்          தன்புபெருக்கல்
வேண்டாதம்முளொன்றினார்   வாழ்கையே   வாழ்க்கை’   என்றலின்;
‘தொய்யிலுஞ் சுணங்கும் நினைத்துக்காண்’  என்றது அகற்சிய தருமை.
இவ்     வெட்டுந் தாமே கூறல் வேண்டினமையின்  முன்னொருகால்
தலைவன்   கூறக்கேட்டுத்   தோழியுந்   தலைவியும்   உணர்ந்தமை
கூறியவாறு காண்க.

‘‘பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ
மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதோ’’
    (கலி.15)

என்பது ஓதற்குப்  பிரிவலெனத்  தலைவன்  கூறியது  கேட்ட தோழி
கூறியது.

‘‘நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார்பிறர் கொளவிளிந் தோரெனத்
தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்
நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந்து
ஆழல் வாழி தோழி தாழாஅது
உருமெனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால்
வரிமரல் நோன்ஞாண் வார்சிலைக் கொளீஇ
அருநிறத் தழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண்கோடு கொண்டு
நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயருங்
கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழிவுடை