நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4979
Zoom In NormalZoom Out


பாசறைப்   புலம்பினமை   கூறக்கேட்ட    தலைவி  ‘‘நம்   நிலை
அறியாராயினும்’’
எனக் கூறினாள்.‘‘திசை   திசை   தேனார்க்குந்
திருமருத முன்றுறை’’
என்பது (கலி.26) காவற் பாங்கின்கட் டலைவன்
கூறியது கேட்ட தலைவி கூறியது. பிறவும் வருவனவெல்லாம் இதனான்
அமைக்க.                                              (44)

மரபு திரியாமல் சில பொருள்கள் திணைகளிடை விரவுதல்
 

45. மரபுநிலை திரியா மாட்சிய வாகி
விரவும் பொருளும் விரவும் என்ப.
 

இது மரபியலுட்  கூறப்படும்   மரபன்றி   அகத்திணைக்கு  உரிய
மரபுகள் கூறுகின்றது.

(இ-ள்.)    மரபுநிலை திரியா மாட்சிய ஆகி - புலனெறி வழக்கஞ்
செய்துவருகின்ற  வரலாற்று  முறைமை திரியாத மாட்சியவாகி; விரவும்
பொருளும் விரவும் என்ப - பாலைத் திணைக்குங் கைக்கிளை பெருந்
திணைக்கும்  உரியவாய்  விரவும்  பொருளும்  ஏனைத் திணைக்கும்
உரியவாய்  விரவும்  பொருளும்  விரவி  வருமென்று கூறுவர் புலவர்
எ-று.

அவை    தலைவி ஆற்றாமை கண்டுழிப் பிரிந்த தலைவன் மீண்டு
வந்தானெனத்  தோழி கூறுவனவும், வரைவிடை வைத்துப் பிரிந்தோன்
தலைவியை   நினைந்து  வருந்திக்  கூறுவனவும்,  உடன்  போயவழி
இடைச்சுரத்து நிகழ்ந்ததனை மீண்டும் வந்துழித் தலைவன் றோழிக்குக்
கூறுவனவும்,  யானினைத்த  வெல்லை  யெல்லாம்  பொருள் முடித்து
வாராது   நின்னல   நயந்து   வந்தேனெனத்   தலைவன்   கூறலும்,
பொருள்வயிற்  பிரிந்தோன்  தலைவியை  நினைந்து  வருந்துவனவும்,
இடைச்சுரத்துத்  தலைவன்  செலவு  கண்டோர்  கூறுவனவும், அவன்
மீட்சி  கண்டோர்  கூறுவனவும்,  ஊரின்கட்  கண்டோர் கூறுவனவும்
பிறவுமாம். அவை பாலைத் திணைக்கு விரவும் பொருளாமென்றுணர்க.

உ-ம்:

‘‘கோடுயர் பன்மலை யிறந்தன ராயினு
நீட விடுமோ மற்றே நீடுநினைந்து
துடைத்தொறுந் துடைத்தொறுங் கலங்கி
யுடைத்தரும் வெள்ள மாகிய கண்ணே’’
    (ஐங்குறு.358)

இவ்  வைங்குறுநூறு தலைவன்  மீண்டானென்றது.  ‘‘பாடின்றிப்
பசந்தகண்’’
(பாலைக்கலி.16) என்பதும் அது.

‘வளைபடு முத்தம் பரதவர் பகருங்
கடல்கெழு கொண்கன் காதன் மடமகள்
கெடலரும் துயர நல்கிப்
படலின் பாயல் வௌவி யோளே’’ 
       (ஐங்குறு.195)

இவ்  வைங்குறுநூறு வரைவிடைவைத்துப் பிரிந்தோன் தனிமைக்கு
வருந்திக் கூறியது.

‘‘புறந்தாழ் பிருண்ட கூந்தற் போதி
னிறம்பெறு மீரிதழ்ப் பொலிந்த வுண்க
ணுள்ளம் பிணிக்கொண் டோள்வயி னெஞ்சஞ்
செல்ல றீர்க்கஞ் செல்வா மென்னுஞ்
செய்வினை முடியா