நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4980
Zoom In NormalZoom Out


தெவ்வஞ் செய்த
லெய்யா மையோ டிளிவுதலைத் தருமென
வுறுதி தூக்கத் தூங்கி யறிவே
சிறிதுநனி விரைய லென்னு மாயிடை
யொளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு போல
வீவது கொல்லென் வருந்தி உடம்பே’’
         (நற்.284)

இந் நற்றிணையும் அது.

‘‘கானப் பாதிரிக் கருந்தகட் டொள்வீ
வேனில் அதிரலொடு விரைஇக் காண்வரச்
சில்லைங் கூந்த லழுத்தி மெல்லிணர்த்
தேம்பாய் மராஅம் அடைச்சி வான்கோல்
இலங்குவளை தெளிர்ப்ப வீசிச் சிலம்புநகச்
சின்மெல் லொதுக்கமொடு மென்மெல இயலிநின்
அணிமாண் சிறுபுறங் காண்டுஞ் சிறுநனி
ஏகென ஏகல் நாணி ஒய்யென
மாகொள் நோக்கமொடு மடங்கொளச் சாஅய்
நின்றுதலை யிறைஞ்சி யோளே அதுகண்டு
யாமுந் துறுதல் செல்லேம் ஆயிடை
அருஞ்சுரத் தல்கி யேமே இரும்புலி
களிறட்டுக் குழுமும் ஓசையுங் களிபட்டு
வில்லோர் குறும்பிற் றதும்பும்
வல்வாய்க் கடுந்துடிப் பாணியுங் கேட்டே’’
    (அகம்.261)

இது மீண்டு வந்தோன் தோழிக்கு உரைத்தது.

‘‘திருந்திழை யரிவை நின்னல முள்ளி
யருஞ்செயற் பொருட்பிணி பெருந்திரு வுறுகெனச்
சொல்லாது பெயர்தந் தேனே பல்பொறிச்
சிறுகண் யானை திரிதரு
நெறிவிலங் கதர கானத் தானே’’
          (ஐங்குறு.355)

இவ்  வைங்குறுநூறு  பெற்ற  பொருள்  கொண்டு  நின்னலம் நயந்து
வந்தேன் என்றது. இது

‘‘அளிதோ தானே நாணே யாள்வினை
யெளிதென லோம்பன்மி னறிவுடை யீரே
கான்கெழு செலவின் னெஞ்சுபின் வாங்கத்
தான்சென் றனனே தமிய னதாஅன்
றென்னா வதுகொறானே பொன்னுடை
மனைமாண் டடங்கிய கற்பிற்
புனையீ ரோதி புலம்புறு நிலையே”

இது செலவு கண்டோர் கூறியது.

‘‘மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்
தலந்தலை ஞெமையத் திருந்த குடிஞை
பொன்செய் கொல்லனி னினிய தெளிர்ப்பப்
பெய்ம்மணி யார்க்கு மிழைகிளர்