நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4982
Zoom In NormalZoom Out


வும் இதனான் அமைக்க.

உ-ம்:

‘‘மரையா மரல்கவர மாரி வறப்ப
வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர்
சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்த
முண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரங்
கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றா
லென்னீ ரறியாதீர் போல விவைகூறி
னின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையு
மன்பறச் சூழாதே யாற்றிடை நும்மொடு
துன்பந் துணையாக நாடி னதுவல்ல
தின்பமு முண்டோ வெமக்கு’’
                 (கலி.6)

இக் கலி எம்மையும் உடன் கொண்டு சென்மினென்றது.

‘‘செருமிகு சினவேந்தன்’’ என்னும் பாலைக்கலியுள்,

‘‘எல்வளை யெம்மொடு நீவரின் யாழநின்
மெல்லியன் மேவந்த சீறடித் தாமரை
யல்லிசே ராயித ழரக்குத்தோய்ந் தவைபோலக்
கல்லுறி னவ்வடி கறுக்குந வல்லவோ’’
          (கலி.13)

இது  தலைவிக்குத்  தலைவன்  உடன்  போக்கு  மறுத்துக்  கூறியது.
இதன் சுரிதகத்து,

‘‘அனையவை காதலர் கூறலின் வினைவயிற்
பிரிகுவ ரெனப்பெரி தழியாதி’’
                (கலி.13)

என வினைவயிற்பிரிவு கூறலின் இது கற்பிற் கூறியதாயிற்று.

இன்னும்    இச்  சூத்திரத்தான்   அமைத்தற்குரிய   கிளவிகளாய்
வருவனவெல்லாம் அமைத்துக்கொள்க.

அகத்திணைப்பொருளை உணரவரும் உவமங்கள்
 

46.உள்ளுறை உவமம் ஏனை உவமமெனத்
தள்ளா தாகும் திணையுணர் வகையே.
 

இஃது  உவமவியலுள்  அகத்திணைக்   கைகோள்   இரண்டற்கும்
பொதுவகையான் உரியதொன்று கூறுகின்றது.

(இ-ள்.)     உள்ளுறை உவமம் ஏனை உவமம் என - மேற்கூறும்
உள்ளுறை உவமம்தான் ஏனைய உவமம் என்று கூறும்படி உவமையும்
உவமிக்கப்படும் பொருளுமாய் நின்றது; திணை உணர் வகை தள்ளாது
ஆகும்.  அகத்திணை  உணர்தற்குக் கருவியாகிய உள்ளுறை, உவமம்
போல  எல்லாத் திணையையும் உணருங் கூற்றைத் தள்ளாதாய் வரும்,
நல்லி