சைப் புலவர் செய்யுட் செய்யின் எ-று.
எனவே ஏனையோர்
செய்யிற் றானுணரும் வகைத்தாய் நிற்கும் என்றவாறாம்.
உ-ம்:
‘‘விரிகதிர் மண்டிலம் வியல்விசும் பூர்தரப் புரிதலை தளையவிழ்ந்த பூவங்கட் புணர்ந்தாடி வரிவண்டு வாய்சூழும் வளங்கெழு பொய்கையுட் டுனிசிறந் திழிதருங் கண்ணினீ ரறல்வார வினிதமர் காதல னிறைஞ்சித்தன் னடிசேர்பு நனிவிரைந் தளித்தலி னகுபவள் முகம்போலப் பனியொரு திறம்வாரப் பாசடைத் தாமரைத் தனிமலர் தளைவிடூஉந் தண்டுறை நல்லூர’’
(கலி.71)
என்பது. விரியுங் கதிரையுடைய
இளஞாயிறு விசும்பிலே பரவாநிற்க, விடியற்காலத்தே இதழ்கண் முறுக்குண்ட தலைகள் அம்முறுக்கு நெகிழ்ந்த செவ்விப்பூவிடத்துக், கள்ளை வண்டு நுகர்ந்து விளையாடி, அதனாலும் அமையாது பின்னும் நுகர்தற்கு அவ்விடத்தைச்
சூழ்ந்து திரியும் அச்செல்வமிக்க பொய்கையுட், பசிய இலைகளுடனின்ற தமைரைத்தனிமலர், தனக்கு வருத்தஞ் செய்யும் பனி ஒரு கூற்றிலே வடியாநிற்கத், தான் மிகச்செவ்வியின்றி அலருந்துறையினையுடைய ஊர
எ-று.
இதனுள் வைகறைக்காலத்து
மனைவயிற் செல்லாது, இளைய செவ்வியையுடைய பரத்தையரைப் புணர்ந்து விளையாடி, அதனானும் அமையாது, பின்னும் அவரைப் புணர்தற்குச் சூழ்ந்து திரிகின்ற இவ்வூரிடத்தே, நின்னைப்பெறாது, சுற்றத்திடத்தேயிருந்து கண்ணீர் வாராநிற்க, நீ ஒருகால் அளித்தலிற், சிறிது செவ்வி பெற்றாளா யிருக்கும் படி வைத்த தலைவியைப் போலே, எம்மையும் வைக்கின்றாயென்று, காமக்கிழத்தி உள்ளுறைவுவமங் கூறினாள். துனி மிகுதலாலே பெருக்கு மாறாது வீழ்கின்ற கண்ணீர் காமத்தீயாற் சுவறி அறுதலை உடைத்தாயொழுக, அவ் வருத்தத்தைக் கண்டு விரைந்து கணவன் அருளுதலிற் சிறிது
மகிழ்பவள்
|