நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4988
Zoom In NormalZoom Out


கண்ணே;     ஏமஞ்சாலா இடும்பை எய்தி - ஒரு தலைவன் (இவள்
எனக்கு  மனைக்கிழத்தியாக  யான்  கோடல்  வேண்டுமெனக் கருதி)
மருந்து  பிறிதில்லாப்  பெருந்துயரெய்தி; நன்மையும் தீமையும் என்று
இருதிறத்தான் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்ந்து - தனது
நன்மையும்  அவளது  தீமையுமென்கின்ற  இரண்டு  கூற்றான்  மிகப்
பெருக்கிய  சொற்களைத்  தன்னொடும் அவளொடுங் கூட்டிச்சொல்லி;
சொல்   எதிர்பெறாஅன்   சொல்லி  இன்புறல்  -  அச்சொல்லுதற்கு
எதிர்மொழி  பெறாதே  பின்னுந் தானே சொல்லி இன்புறுதல்; புல்லித்
தோன்றும் கைக்கிளைக் குறிப்பே - பொருந்தி தோன்றுங் கைக்கிளைக்
குறிப்பு எ-று.

அவளுந்     தமருந்   தீங்குசெய்தாராக  அவளொடு  தீங்கைப்
புணர்த்துந்,   தான்  ஏதஞ்செய்யாது  தீங்குபட்டானாகத்  தன்னொடு
நன்மையைப்  புணர்த்தும்  என நிரனிறையாக உரைக்க. இருதிறத்தாற்
றருக்கிய எனக் கூட்டுக.

உ-ம்:

‘‘வாருறு வணரைம்பால் வணங்கிறை நெடுமென்றோட்
பேரெழின் மலருண்கட் பிணையெழின் மானோக்கிற்
காரெதிர் தளிர்மேனிக் கவின்பெறு சுடர்நுதற்
கூரெயிற்று முகைவெண்பற் கொடிபுரை நுசுப்பினாய்
நேர்சிலம் பரியார்ப்ப நிரைதொடி வீசினை
யாருயிர் வௌவிக்கொண் டறிந்தீயா திறப்பாய்கேள்!

உளனாவென் னுயிரையுண் டுயவுநோய் கைம்மிக
விளமையா னுணராதாய் நின்றவ றில்லானுங்
களைநரி னோய்செய்யுங் கவினறிந் தணிந்துதம்
வளமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்;

நடைமெலிந் தயர்வுறீஇ நாளுமென் னலியுநோய்
மடமையா னுணராதாய் நின்றவ றில்லானு
மிடைநில்லா தெய்க்குநின் னுருவறிந் தணிந்துதம்
உடைமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்;

அல்லல்கூர்ந் தழிபுக வணங்காகி யடருநோய்
சொல்லினு மறியாதாய் நின்றவ றில்லானு
மொல்லையே யுயிர்வௌவு முருவறிந் தணிந்துதஞ்
செல்வத்தாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்;

எனவாங்கு,

ஒறுப்பின்யா னொறுப்பது நுமரையான் மற்றிந்நோய்
பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயிற் புனையிழாய்
மறுத்திவ்வூர் மன்றத்து மடலேறி
நிறுக்குவென் போல்வல்யா னீபடு பழியே’’
      (கலி.58)

எனத் தான் உயிர்கொடுத்தானாகத்