நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4991
Zoom In NormalZoom Out


யிற் றோன்றினேற் கேம
மெழினுத லீத்தவிம் மா;
அகையெரி யானாதென் னாருயி ரெஞ்சும்
வகையினா னுள்ளஞ் சுடுதரு மன்னோ
முகையே ரிலங்கெயிற் றின்னகை மாதர்
தகையாற் றலைக்கொண்ட நெஞ்சு;
அழன்மன்ற காம வருநோய் நிழன்மன்ற
நேரிழை யீத்தவிம் மா;

ஆங்கதை,
யறிந்தனி ராயிற் சான்றவிர் தான்றவ
மொரீஇத் துறக்கத்தின் வழீஇ யான்றோ
ருள்ளிடப் பட்ட வரசனைப் பெயர்த்தவ
ருயர்நிலை யுலகமுறீஅ யாங்கென்
றுயர்நிலை தீர்த்த னுந்தலைக் கடனே.’’
       (கலி.139)

இஃது ஏறிய மடற்றிறம்.

‘‘உக்கத்து மேலு நடுவுயர்ந்து வாள்வாய
கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான்
புக்ககலம் புல்லினெஞ் ஞான்றும் புறம்புல்லி
னக்குளுத்துப் புல்லலு மாற்றே னருளீமோ
பக்கத்துப் புல்லச் சிறிது.’’
                   (கலி.94)

இதனுட், ‘கொக்குரித்தன்ன’ வென்பதனாற்  றோல்  திரைந்  தமை
கூறலின் இளமைதீர் திறமாயிற்று.

‘‘உளைத்தவர் கூறு முரையெல்லா நிற்க
முளைத்த முறுவலார்க் கெல்லாம் - விளைத்த
பழங்கள் ளனைத்தாய்ப் படுகளி செய்யும்
முழங்கும் புனலூரன் மூப்பு’’
           (புற. வெ. 12:14)

‘‘அரும்பிற்கு முண்டோ வலரது நாற்றம்
பெருந்தோள் விறலி பிணங்கல் - சுரும்போ
டதிரும் புனலூரற் காரமிர்த மன்றோ
முதிரு முலையாண் முயக்கு’’
          (புற. வெ. 12:13)

என்பனவும் அது.

‘‘புரிவுண்ட புணர்ச்சி’’ என்னும் (கலி.142) நெய்தற்பாட்டு காமத்து
மிகுதிறம்.   இதனைப்   பொருளியலுட்   காட்டுதும்,  ஆண்டோதும்
இலக்கணங்களுந்  தோன்ற. இதனுட் டெளிந்து கூறுவனவும் ஆண்டுக்
காண்க.

‘‘ஏ எயிஃதொத்த னாணிலன் றன்னொடு
மேவேமென் பாரையு மேவினன் கைப்பற்று
மேவினு மேவாக் கடையு மவையெல்லா
நீயறிதி யானஃதறிகல்லேன் பூவமன்ற
மெல்லிணர் செல்லாக் கொடியன்னாய் நின்னையான்
புல்லினி தா