நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4993
Zoom In NormalZoom Out


நிமித்தமா மென்றுணர்க.                                  (52)

புலனெறி வழக்கம் கலிப்பாவின்கண்ணும்
பரிபாடற்கண்ணும் நடத்தற்கு உரித்தாதல்
 

53.நாடகவழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கங்
கலியே பரிபாட் டாயிரு பாங்கினும்
உரியதாகு மென்மனார் புலவர்.
 

இது      புலனெறி    வழக்கம்    இன்னதென்பதூஉம்,   அது
நடுவணைந்திணைக்கு  உரிமையுடைத்தென்பதூஉம், இன்ன செய்யுட்கு
உரித்தென்பதூஉம் உணர்த்துத னுதலிற்று.

(இ-ள்.)     நாடகவழக்கினும்       உலகியல்       வழக்கினும்
-புனைந்துரைவகையானும்,    உலகவழக்கத்தானும்;   பாடல்   சான்ற
புலனெறி  வழக்கம்.  புலவராற்  பாடுதற்கமைந்த புலவராற்று வழக்கம்;
கலியே  பரிபாட்டு  அஇரு  பாங்கினும்  உரியது  ஆகும் என்மனார்
புலவர்.    கலியும்    பரிபாடலுமென்கின்ற   அவ்விரண்டு   கூற்றுச்
செய்யுளிடத்தும் நடத்தற்கு உரியதாமென்று கூறுவர் புலவர் எ-று.

இவற்றிற்கு     உரித்தெனவே, அங்ஙனம்  உரித்தன்றிப்  புலனெறி
வழக்கம்  ஒழிந்த பாட்டிற்கும் வருதலும், புலனெறி வழக்கம்  அல்லாத
பொருள்   இவ்விரண்டற்கும்   வாராமையுங்  கூறிற்று.  இவை  தேவ
பாணிக்கு    வருதலுங்    கொச்சகக்   கலி   பொருள்வேறுபடுதலுஞ்
செய்யுளியலுள்         வரைந்து     ஓதுதும்.       ‘மக்கணுதலிய
அகனைந்திணையு’
மென   (தொல்.   பொ.  அகத்.  54). மேல்வரும்
அதிகாரத்தானும்,  இதனை  அகத்திணையியலுள்   வைத்தமையானும்.
அகனைந்திணை  யாகிய  காமப்பொருளே  புலனெறி வழக்கத்திற்குப்
பொருளாமென் றுணர்க.

‘பாடல்     சான்ற’ என்றதனாற் பாடலுள்   அமைந்தனவெனவே,
பாடலுள்   அமையாதனவும்   உளவென்று   கொள்ளவைத்தமையிற்,
கைக்கிளையும் பெருந்திணையும் பெரும்பான்மையும் உலகியல் பற்றிய
புலனெறி    வழக்காய்ச்    சிறுபான்மை    வருமென்று    கொள்க.
செய்யுளியலுட்     கூறிய    முறைமையின்றி    ஈண்டுக்    கலியை
முன்னோதியது,   கலியெல்லாம்  ஐந்திணைப்  பொருளாய  புலனெறி
வழக்கிற்  காமமுங், கைக்கிளை பெருந்திணையாகிய உலகியலே பற்றிய
புலனெறி  வழக்கிற் காமமும் பற்றி வருமென்றற்கும், பரிபாடல் தெய்வ
வாழ்த்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகிய