நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4994
Zoom In NormalZoom Out


லே பற்றி வருமென்றற்கும் என்றுணர்க.

ஆசிரியரும்     வெண்பாவும்    வஞ்சியும்  அகம்  புறமென்னும்
இரண்டற்கும்   பொதுவாய்   வருமாறு   நெடுந்தொகையும்   புறமுங்
கீழ்க்கணக்கும் மதுரைக்காஞ்சியும் பட்டினப்பாலையும்   என்பனவற்றுட்
காண்க. மருட்பாத் ‘தானிது வென்னுந் தனிநிலை’ (தொ. பொ. செய்.
85) இன்மையின் வரைநிலையின்று.

‘‘மனைநெடு வயலை வேழஞ் சுற்றுந்
துறைகே ழூரன் கொடுமை நாணி
நல்ல னென்றும் யாமே
யல்ல னென்னுமென் றடமென் றோளே’’  
   (ஐங்குறு.11)

இதனுள்   முதல் கரு வுரிப்பொருளென்ற மூன்றுங் கூறலின் நாடக
வழக்குந்,  தலைவனைத்  தலைவி  கொடுமை  கூறல் உலகியலாகலின்
உலகியல்  வழக்கும்  உடன்கூறப்பட்டன. இவ்விரண்டுங் கூடிவருதலே
பாடலுட்   பயின்ற  புலனெறி  வழக்கமெனப்படும்.  இவ்விரண்டனுள்
உலகியல் சிறத்தல்  ‘உயர்ந்தோர் கிளவி’ (தொ. பொ.  பொரு. 23)
என்னும் பொருளியற் சூத்திரத்தானும் மரபியலானும் பெறுதும்.

‘‘முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாக
ரினிதெனக் கணவ னுண்டலி
ணுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே’’

                                    (குறுந்.167)

இஃது உலகியலே வந்தது.

இனி  அவ்வந்  நிலத்து  மக்களே   தலைவராயக்கால்   அவை
உலகியலேயாம்.

இனிக்     கைக்கிளையுள் ஆசுரமாகிய   ஏறுகோடற்  கைக்கிளை,
காமப்பொருளாகிய  புலனெறிவழக்கில்  வருங்கால்,  முல்லை  நிலத்து
ஆயரும்   ஆய்ச்சியருங்   கந்தருவமாகிய   களவொழுக்கம்  ஒழுகி
வரையுங்காலத்து,   அந்நிலத்தியல்பு   பற்றி   ஏறுதழுவி   வரைந்து
கொள்வரெனப்  புலனெறி  வழக்காகச்  செய்தல் இக்கலிக்குரித்தென்று
கோடலும்   ‘பாடலுள்   அமையாதன’  என்றதனாற்  கொள்க.  அது
‘‘மலிதிரையூர்ந்து’’ என்னும் முல்லைக்கலியுள் (4) ‘‘ஆங்க ணயர்வர்
தழூஉ’’
   என்னுந்   துணையும்   ஏறு   தழுவியவாற்றைத்   தோழி
தலைவிக்குக் காட்டிக் கூறிப், ‘‘பாடு